சுய பாதுகாப்பு மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது… நந்திதாவின் அட்வைஸ்!!

நந்திதா நந்தா லவ்சு நந்திதா என்ற கன்னடத் திரைப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் இவருக்கு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அட்டகத்தி திரைப்படத்தில் ஓரளவு ரசிகர்களின் கவனத்தைப்…

நந்திதா நந்தா லவ்சு நந்திதா என்ற கன்னடத் திரைப்படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் இவருக்கு அட்டகத்தி திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அட்டகத்தி திரைப்படத்தில் ஓரளவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நந்திதா, எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பிரபலமானார்.

அதன்பின்னர் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையக தொடர்ந்து ஒப்பந்தமாகி வந்தார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப் பட்டி, நளனும் நந்தினியும் போன்ற படங்கள் மிகச் சிறப்பானவை.

76c0d90eb99e1c831eb43a5d6102e6a8

இவரது சிறப்பான நடிப்பால் தெலுங்கு மொழிப்படங்களிலும் தொடர்ந்து வாய்ப்பினைப் பெற்று வருகிறார். தற்போது இவர் தமிழில் கபடதாரி படத்தில் நடித்து வருகிறார். அதுபோக தெலுங்கில் 2 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கால் வீட்டில் இருந்துவரும் இவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் அந்த வீடியோவில், “சுய பாதுகாப்பு மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. யாருக்கேனும் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், தங்கள்மீது அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்ளுதல் வேண்டும். டேக் கேர் என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன