அமைதிப்படை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சீமான் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு வெளியான பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தை தொடர்ந்து இனியவளே, வீரநடை, தம்பி மற்றும் வாழ்த்துகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தம்பி மற்றும் வாழ்த்துக்கள் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமைதிப்படை படத்தில் நடிக்க ஆரம்பித்த சீமான் மிடில் கிளாஸ் மாதவன், ஆடும் கூத்து, பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மாயாண்டி குடும்பத்தார், மாஸ்கோவின் காவேரி, மகிழ்ச்சி, சட்டப்படி குற்றம், நாகராஜ சோழன் எம் ஏ எம்எல்ஏ, டிராபிக் ராமசாமி, காட்டுப் பயிர் சார் இந்த காளி. தவம் மற்றும் முந்திரிக் காடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான்:
நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து ஒரு நிலையில் அதிகளவில் சினிமாவை தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகராக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ன டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் சிறப்பு கதாபாத்திரத்தில் சீமானும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயற்கை விவசாயி:
மீண்டும் சினிமாவில் நடிக்க சீமான் ஒப்புக்கொள்ள காரணமே, அந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரம் தான் எனக் கூறுகின்றனர். சீமான் இந்த படத்தில் இயற்கை விவசாயத்தை விரும்புவதாகவும் அவரது மகனாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் செயற்கை விவசாயத்தை விரும்புவதாகவும் திரைக்கதையை விக்னேஷ் சிவன் அமைத்திருப்பதாக கூறுகின்றனர்.
லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் சத்யராஜ் காம்பினேஷன் நல்லாவே ஒர்க் அவுட் ஆன நிலையில், அதேபோல டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரம் போல பிரதீப் ரங்கநாதன் மற்றும் சீமான் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.