
சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் சென்னையில் இந்த பூஜை நடைபெற்றது
இந்த பூஜையில் பாரதிராஜா, கலைப்புலி எஸ் தாணு, வெங்கட்பிரபு, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் சர்ப்ரைஸாக இயக்குனரும் நடிகரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்து கொண்டார். இவர் இந்த பூஜையில் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

விரைவில் சிம்புவை வைத்து சீமான் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று சீமான் இந்த பூஜையில் கலந்து கொண்டிருப்பது கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜை ஸ்டில்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது