தமிழக வெற்றிக்கழகத்தைத் தொடங்கிய விஜய் கட்சிக் கொடியையும் அதற்கான விளக்கத்தையும், கொள்கைப்பாடலையும் தௌள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டார். அது மட்டும் அல்லாமல் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தி முடித்து விட்டார். அது தவிர கொள்கைகள், தீர்மானங்கள் என பெரிய பட்டியலே போட்டுவிட்டார்.
நயன்தாராவுக்குக் கூட்டம்
கட்சி மாநாட்டுக்கு வந்தக் கூட்டத்தைப் பார்த்து சீமான் இதெல்லாம் வாக்குகள் ஆகிவிடாது. நயன்தாராவுக்குக் கூட சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு 4 லட்சம் பேர் கூடினர். அதனால் கூட்டத்தை வைத்து நாம் வெற்றியை முடிவு பண்ண முடியாது என்றும் விமர்சனம் செய்தார்.
அது ஒரு நட்சத்திரத்தைப் பார்ப்பதற்காக வந்த கூட்டம். அதை எல்லாம் பெரிய விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அது அவரைப் பார்க்க வந்த கூட்டமாகத் தான் இருக்கும் என்றார்.
கருவாட்டு சாம்பார்
அதுமட்டும் அல்லாமல் விஜயின் கொள்கையைப் பார்த்தால் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என்கிறார். அதன் பொருளை அவர் சொல்லட்டும் பார்க்கலாம். அவரது கொள்கை கருவாட்டு சாம்பார் போல உள்ளது என்றார். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு பாசிஸம் பற்றி தெரியவில்லை போலும். அதன் அர்த்தம் புரியாமல் பாசிசமா, பாயாசமா என்றெல்லாம் பலரும் கேள்வி எழுப்பினர்.
வாழ்த்து சர்ச்சை
ஆனால் எல்லாவற்றிற்கும் பொறுமை காத்த விஜய் பெருந்தன்மையாக சீமானின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யக் கட்சித்தலைவர் கமலுக்குக் கூட வாழ்த்து சொல்லவில்லை. அதுவும் சர்ச்சையானது.
தனது நன்றிக்கடனைத் தீர்க்க தமிழக மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக விஜய் அரசியலுக்குள் இறங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தளபதி 69 தான் தனது கடைசி படம் என்றும் அதன்பிறகு முழுநேர அரசியல்வாதியாகவும் இறங்குவதாக அறிவித்து இருப்பது அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.
சீண்டிப்பார்க்கும் சீமான்
ஏன்னா இப்போ அவர் கிட்டத்தட்ட 250 கோடி வரை ஒரு படத்துக்கு சம்பளமாக பெற்று வருகிறார். அப்படி இருக்கும்போது அதை விட்டுவிட்டு வர யாருக்குத் தான் மனசு வரும்? ஆனால் விஜய் இப்படி விட்டு இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? 2026ல் ஆட்சியைப் பிடிப்பதே அவரது இலக்கு. ஆனால் இடையில் பலரும் அவரை விமர்சனம் செய்த வரும்வேளையில் சீமான் ரொம்பவே சீண்டிப் பார்க்கிறார்.
விஜய் அரசியலைப் பாம்பு என்று சொல்லி இருந்தார். பாம்பைக் கையில புடிச்சிட்டேன். எனக்குப் பயமே கிடையாது. ஏன்னா நான் ஒரு குழந்தை. புகுந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார். வெறும் டயலாக்காக இல்லாம் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்.அந்தவகையில் தற்போது சீமான் விஜயைக் கடுமையாகச் சாடும் வகையில் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அது இதுதான்.
உலக வெற்றுக்கழகம்
உலக அளவில் ரசிகர்கள் வைத்துள்ள விஜய், தன் கட்சிக்கு ‘உலக வெற்றுக்கழகம்’ என்று பெயர் வைக்காதது ஏன்? கேரளாவில் அதிக ரசிகர்கள் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் அங்கு கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன்பிறகாவது விஜய் பொறுமை தான் காப்பாரா? இல்லை பொங்கி எழுவாரா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.