நடிகரும், இயக்குனருமான சசிக்குமார் பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இவரது தயாரிப்பில் 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் தான் முதல் படம். சூப்பர் டூப்பர்ஹிட் ஆனது. தொடர்ந்து 2009ல் பசங்க படத்தைத் தயாரித்து ஹிட் கொடுத்தார். இவற்றில் சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தும் அசத்தினார். இவரது நண்பர் சமுத்திரக்கனி. நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், தாரை தப்பட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தினார்.
தற்போது இவர் அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் பேம்லி படத்தில் நடித்துள்ளார். ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மதுரைக்காரரான சசிக்குமார் இலங்கைத் தமிழ் பேசி நடித்தது புதுமையாக உள்ளது. நாளை படம்; ரிலீஸ் ஆவதையொட்டி கடந்த சில நாள்களாக பல யூடியூப் சேனல்களில் இவரது பேட்டி வந்தன.
இந்த நிலையில் தனால்தான் என் குடும்பத்தை வெளியே காட்டுல என்கிறார் நடிகரும் இயக்குனருமான சசிக்குமார். அவருடைய டூரிஸ்ட் பேம்லி என்ற படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் ஏன் இப்படி ஒரு வார்த்தையை சொன்னாருன்னு பார்க்கலாமா…
எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கு. ஆனா என் சினிமா வாழ்க்கைல அவங்களை நான் பெரிதா காட்டிக்கறது இல்ல. அதுக்கு காரணம் இப்போ அவங்க சாதாரணமா பஸ்ல போறாங்க. ஆட்டோல போறாங்க. என் புள்ளைங்க கிராமத்துல இருக்க ஒரு பள்ளில தான் படிக்கிறாங்க. அவங்களுக்கு அந்த வாழ்க்கை தான் புடிச்சி இருக்கு. அதனால நானும் அவங்கள கட்டாயப்படுத்தல என்கிறார். அந்த வகையில் சினிமாத்துறையில் இருந்து கொண்டு இவ்வளவு எளிமையா இருக்குறாரே எனும்போது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


