விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையவுள்ளது.
வார இறுதியான நேற்றைய நிகழ்ச்சியின் போது கமல் ஹாசன் மக்கள் முன் தோன்றிப் பேசினார்.
பிக் பாஸ் வீட்டில் நேற்றையநாள் ரஜினியின் பேட்ட படத்தில் உள்ள எத்தனை சந்தோஷம் என்ற பாடலுடன் தொடங்கியது. கடைசி நாள் என்பதால் வழக்கத்தைவிட நிறைய டான்ஸ் மாஸ்டர்கள் போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடினர்.
முதல் பாடல் முடிய, மெர்சல் படத்தின் “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடலும் போடப்பட, அதற்கும் டான்ஸ் ஆடினர். அந்த சாங்குக்கு ஏற்றார்போல், சாண்டியை டான்ஸ் மாஸ்டர்கள் தூக்கி கொண்டாடினர்.
அது முடிந்த பின்னர், பல நாட்களுக்குப் பிறகு டான்ஸ் மாஸ்டர்களுடன் டான்ஸ் ஆடியது மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் பழைய நினைவுகள் வருகிறது. நடனக் கலைஞனா, கலைஞர்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று உணர்வு பொங்கப் பேசினார்.
எப்போதும் மிக சாதாரணமாக சுற்றிவரும் சாண்டி, முதல் முறையாக தன்னை டான்ஸ் மாஸ்டராக காட்டிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.