முகெனை உணர்ச்சி பொங்க செய்த ஷெரின்!

By Staff

Published:

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையவுள்ளது.

கடந்த வாரம் முழுதும் கடந்த நாட்களை நினைவு கூர்ந்து வந்தனர். வீட்டில் நடந்த சோகங்கள், மகிழ்ச்சிகள், கண்ணீர்கள், காதல்கள், பிரிவுகள், குடும்ப உறுப்பினர்களின் வருகை என அனைத்தையும் அவ்வப்போது பிக் பாஸ் நினைவுபடுத்தும் விதமாக டாஸ்க்குகள் கொடுத்தார்.

fb31f12b2219c8430676138cea06129c-2

இந்தவகையில் நேற்றைய நாள்,  வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு மற்ற போட்டியாளர்களின் நினைவுகளை எடுத்துச் செல்ல ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது டீசர்ட்டில் தங்களுக்கு தோன்றும் செய்திகளை எழுதச் சொன்னார்.

ஒவ்வொருவரும் மாறி மாறி எழுதினர், அப்போது என்னை எப்போதும் உன் இதயத்தில் சுமந்து செல் என்று முகெனுக்கு ஷெரின் எழுதினார், நான் உன் கூட வாழ்க்கை முழுதும் இருப்பேன் என ஷெரினுக்கு லாஸ்லியா எழுதினார்.

  உன் எதிர்காலம் உன்னைப் போல் அழகானது என்று லோஸ்லியாவிற்கு முகென் எழுதினார். நீ என்னுடைய செல்லக்குட்டி என முகினுக்கு சாண்டி எழுதினார். பார்க்கவே அது உணர்வுப் பூர்வமாக இருந்தது.

Leave a Comment