பிக்பாஸ் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று கருதப்பட்ட தர்ஷன் கடைசி நேரத்தில் திடீரென வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு மக்கள் ஆதரவு குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தர்ஷனின் காதலி என்று கூறப்பட்ட நடிகை சனம் ஷெட்டி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திடீரென திருமணம் செய்ய மறுப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
மேலும் தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான் ரூபாய் 15 லட்சம் வரை செலவு செய்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது