கையுடன் கை சேர்ந்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. மறுமணத்திற்கு தயாராகிவிட்டாரா? உலகம் சுற்றும் காதலர்கள்?

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், நான்கே வருடங்களில் இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து…

samantha 4

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், நான்கே வருடங்களில் இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். அதன் பின்னர், நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், சமந்தாவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது.

samantha3

அதற்கேற்ற வகையில், பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் அவர் இணைந்து இருக்கும் புகைப்படங்கள், இருவரும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, இருவரும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் வலம் வந்தன. தற்போது, சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவருடைய வீடியோக்களை வெளியிட்டு தங்கள் இருவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தியதோடு, தன் மீதான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

samantha

தற்போது அமெரிக்காவில் சமந்தா மற்றும் ராஜ் இருவரும் பயணம் செய்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருவரும் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. “சமந்தாவின் முன்னாள் கணவர் தனக்கென ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்ட நிலையில், சமந்தாவும் ஒரு வாழ்க்கையை தேடிக்கொள்வது தவறில்லை” என்று இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

samantha2

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் பயணத்தின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் சில ரொமான்ஸ் காட்சிகளும், ரம்மியமான காட்சிகளும் இருக்கும் நிலையில், ஒரு புகைப்படத்தில் ராஜின் கையை பிடித்துக்கொண்டு சமந்தா சாலையைக் கடக்கும் புகைப்படமும் உள்ளது. மற்றொரு புகைப்படத்தில் சமந்தா தனது நண்பர்களுடன் ஒரு உணவகத்தில் உணவு அருந்தும் காட்சியும் உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது, சமந்தாவுக்கு இன்னொரு காதல் ஏற்பட்டுவிட்டது என்றும், விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

samantha1

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்தபோது, “எத்தனை கோடி ஜீவனாம்சம் வேண்டும்?” என நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா கேட்க, “ஒரு பைசா கூட வேண்டாம்” என்று கூறிவிட்டு அவர் வீட்டை விட்டு வெளியே வந்ததை அடுத்து, அவர் பணத்திற்கு ஆசைப்படாதவர் என்று தெரியவந்தது. அதேபோல், அவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தவரை உண்மையாகத்தான் இருந்தார் என்றும், ஆனால் நாக சைதன்யாவை விட சமந்தாவின் புகழ் திரை உலகில் அதிகரித்து வந்ததால் ஏற்பட்ட ஈகோதான் அவர்களின் பிரிவுக்குப் பெரிய காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ‘டி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா நெருக்கமாக இருந்து வரும் நிலையில், “அவருக்கு இந்த வாழ்க்கையாவது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையட்டும்” என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.