நீங்க பண்ணுறத பாக்கவே அருவருப்பாக இருக்கு.. பதிலடி கொடுத்த சாய் பல்லவி!

Published:

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து மிகப்பெரிய பிரபலம் அடைந்தார்.

இவர் மலையாளத்தை தொடர்ந்து தமிழில் தனுஷ் உடன் மாரி, நடிகர் சூர்யாவுடன் என் ஜி கே, அடுத்ததாக கார்கி என அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழ், மலையாள ரசிகர்களை விட தற்போது அவருக்கு தெலுங்கில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

சாய் பல்லவியின் நடனத்திற்கென தனி ரசிகர் கூட்டம் இருந்து வரும் நிலையில் இவர் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியிருந்தது. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK 21 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பின் போது நடிகர் கமலஹாசன் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முதலில் வைரலானது, அதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருந்த நிலையில் சாய் பல்லவி காஷ்மீர் சென்று ஆன்மிக சுற்றுலாவாக அமர்நாத் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்று புனித ஸ்தலங்களில் வழிபட்டு புகைப்படங்கள் இணையத்தில் அடுத்ததாக வைரல் ஆனது.

அந்த வகையில் தற்பொழுது சாய் பல்லவிக்கு திருமணம் நடந்துள்ளதாக புது சர்ச்சை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக தன்னைக் குறித்த வதந்திகளுக்கு பதில் சொல்லாத சாய் பல்லவி இந்த முறை ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவிக்கும் இயக்குனர் ராஜ்குமாருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்ததாக மிகப்பெரிய வதந்தி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு மிகவும் வைரலானது. இது குறித்து சாய்பல்லவி கூறுவது, பொதுவாக என்னை குறித்து வரும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வதில்லை, ஆனால் இந்த முறை தன்னுடைய நெருக்கமான நட்பு வட்டாரங்கள் இதில் பங்கு பெற்றிருப்பதால் இந்த வதந்திக்கு தான் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தான் நடிக்க இருக்கும் எஸ்கே 21 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ தவறான முறையில் மாற்றி சர்ச்சைகளை பரப்பி வருவதாக கூறியுள்ளார். எஸ் கே 21 படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என விளக்கம் கொடுத்துள்ளார்.

சால்சா முதல் பேலே டான்ஸ் வரை பின்னி பெடல் எடுக்கும் கீர்த்தி பாண்டியன்… நடமாடும் விவசாயியாக மாறியது எப்படி?

தன்னுடைய அடுத்தடுத்த படம் குறித்த அப்டேட்களை மகிழ்ச்சியாக வெளியிட்டு வரும் நேரத்தில் இந்த மாதிரி சில சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க தனக்கு நேரமில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்த மாதிரி பணம் சம்பாதிப்பதற்காக தேவையில்லாத வேலை செய்பவர்களை பார்த்தால் தனக்கு அருவருப்பாக இருக்கிறது என்று கூறி தன் மீது வைத்திருந்த திருமண வதந்திக்கு சாய்பல்லவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழில் ரங்கூன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி இப்போது சிவகார்த்திகேயனை வைத்து எஸ்கே 21 படத்தை இயக்க உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் சாய் பல்லவி எஸ் கே 21 படத்தை தொடர்ந்து தெலுங்கில் நாகச் சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் உங்களுக்காக...