பாலிவுட்டில் மிகவும் ஃபேமஸான நடிகராக ஏராளமானோர் காணப்படுகிறார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவராக திகழ்ந்து கொண்டு வருகிறார் பிரபல நடிகர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் வெளியான 83 என்ற திரைப்படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே இவர் அதிகளவு வரவேற்கப்பட்டார். ஏனென்றால் அந்த திரைப்படத்தில் இந்தியாவிற்கு முதலாக உலக கோப்பையை வாங்கி கொடுத்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார்.
மேலும் அந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஜாம்பவான் இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடி கொண்டு வருகிறார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் இவரின் நெருங்கிய நண்பராக உள்ள கிரிக்கெட் உலகின் ராஜாவாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், அவரின் பிறந்தநாளை போற்றும் வகையில் அவரும், ரன்வீர் சிங் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் லைக் கொடுத்துக் கொண்டு வருகின்றனர்.
https://www.instagram.com/p/CfqwodKs8N8/?utm_source=ig_web_copy_link