எஸ்.ஏ ராஜ்குமார்கிட்ட இவ்வளவு மியூசிக் டைரக்டர் அசிஸ்டண்டா இருந்துருக்காங்களா

எஸ்.ஏ ராஜ்குமார் இசைஞானி இளையராஜா இசையமைத்தபோதே சினிமா உலகில் அடியெடுத்து வைத்து சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். சின்னப்பூவே மெல்லபேசு படத்தின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. இந்த படம் மூலம்…

எஸ்.ஏ ராஜ்குமார் இசைஞானி இளையராஜா இசையமைத்தபோதே சினிமா உலகில் அடியெடுத்து வைத்து சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்.

c49fabcdc59dc021b5d9016a628d75a2

சின்னப்பூவே மெல்லபேசு படத்தின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது. இந்த படம் மூலம் அறிமுகமான எஸ்.ஏ ராஜ்குமார் பறவைகள் பலவிதம், ஒரு பொண்ணு நெனச்சா, மனசுக்குள் மத்தாப்பூ உள்ளிட்ட படங்களின் மூலம் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தார்.

இவரிடம் வித்யாசாகர், ஏ.ஆர் ரஹ்மான், உள்ளிட்டோர் இசை உதவியாளர்களாக பணியாற்றி இருக்கிறார்களாம்.

சின்னப்பூவே மெல்லப்பேசு என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசிக்க அருண்மொழி, நவீன்,வித்யாசாகர் ஒருங்கிணைக்க, ரஹ்மான் கீ போர்டு வாசிக்க என மிகப்பெரிய அளவில் அந்த பாடலை தயார் செய்துள்ளார்கள்.

ஆரம்ப காலத்தில் வித்யாசாகர், ஏ.ஆர் ரஹ்மான் போன்றோர் இவரின் பல பாடல்களுக்கு பணியாற்றியுள்ளனர். ரஹ்மான் பொன்மாங்குயில் சிங்காரமாய் பண்பாடுதே என்ற மனசுக்குள் மத்தாப்பூ படப்பாடலுக்கு இசை உதவி செய்துள்ளாராம்.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர் எஸ்.ஏ ராஜ்குமாரின் பாடல்களை மனம் விட்டு பாராட்டுவாராம்.

ஆரம்ப காலத்தில் வந்த படங்களின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்றாலும் எஸ்.ஏ ராஜ்குமாருக்கு விக்ரமனுடன் இணைந்த பிறகுதான் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்ததாம். அதிலும் விக்ரமனுடன் புதுவசந்தம் படத்தில் இணைந்த பிறகு அந்த பாடல் ஹிட் ஆன பிறகு எஸ்.ஏ ராஜ்குமாரின் லெவல் எங்கேயோ போய்விட்டதாம். இப்படியாக பல நினைவுகளை ஒரு வாரப்பத்திரிக்கையின் இணையதளத்தில் எஸ்.ஏ ராஜ்குமார் பகிர்ந்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன