இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் படங்கள் அதிக கிளாமர் காட்சிகளுடனே இருக்கும். விஜயின் ஆரம்ப கால படங்கள் பல எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களே இதில் பல படங்கள் க்ளாமர் காட்சிகளுடனே இருக்கும்.
தற்போதுள்ள இணைய உலகில் அதிகமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் இச்சூழலில் அப்போதிருந்தது போல கதை காட்சியமைப்பு க்ளாமர் என இருந்தால் இக்காலத்துக்கு அது ஏற்றதல்ல என்பது பலர் கருத்து.
அதன்படி கடந்த வெள்ளியன்று வெளியான இவர் இயக்கிய ஜெய் நடித்திருக்கும் கேப்மாரி திரைப்படம் உண்மையில் கேப்மாரித்தனமாக உள்ளதாகவே பலரின் கருத்தாக உள்ளது.
கதாநாயகிக்கு பீர் கொடுத்து உடலால் இணைவது, இன்னொரு நாயகியுடனும் இது போல இணைவது, நன்றி காமசூத்ரா புத்தகம் என நன்றியை டைட்டில் கார்டில் போடுவது, இருவருடனும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துவது என வரும் காட்சிகள் முகம் சுழிப்பதாய் உள்ளது.
இதை பார்த்த திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய கேப்மாரி திரைப்படம் மிகவும் மோசமான கதை அம்சத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பாலியல் குற்றங்கள் பெருகி வரும் இன்றைய சூழலில் கேப்மாரி போன்ற திரைப்படங்களை எவ்வாறு தணிக்கை செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.