‘ரோஜா மலரே ராஜகுமாரி..’ புகழ் ஆனந்தன்.. 90-களின் புகழ்பெற்ற நடிகையின் அப்பாவா இவர்?

By John A

Published:

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று ஜாம்வான்கள் திரையுலகயே ஆண்டு கொண்டிருந்த காலகட்டத்தில் சப்தமில்லாமல் வந்து செஞ்சரி அடித்து இன்றும் மனதில் நிற்கும் பாடல்களான ரோஜா மலரே ராஜகுமாரி… பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்  போன்ற காவியங்களுக்குச் சொந்தக்காரர்தான் பழம்பெரும் நடிகர் ஆனந்தன்.

மேல சொன்ன இந்த இரண்டு பாடல்களிலும் நடிகை சச்சுவுடன் இவர் இணைந்து ஆடும் போது இந்தக் கால டூயட் பாடல்களுக்கே சவால் விடும். தனிமையில் காதலியை நினைத்துப் பாடும் பாடாத பாட்டெல்லாம்.. இருவரும் இணைந்து ஆடிய ரோஜா மலரே ராஜகுமாரி ஆகிய இரு பாடல்களும் இன்றும் சூப்பர் ஹிட் பாடல்களின் வரிசையில் ஒன்றாக உள்ளது.

வீரத்திருமகன் என்ற இப்படத்தில் நடித்த ஆனந்தன் சேலத்தில் பிறந்து பின் 1950களின் தொடக்கத்தில் தனது இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு முதல் வாய்ப்பை தந்தது மலையாள திரையுலகம். 1952 இல் தயாரான அச்சன் என்ற படத்தில் ஆனந்தன் அறிமுகமானார்.

சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆனந்தனை மலையாள தயாரிப்பாளரும், இயக்குநருமான தளியத் ஜோசப் ஜுனியர் ஹீரோவாக்கினார். அவர் தமிழில் இயக்கிய விஜயபுரி வீரன் படத்தில் ஆனந்தன் நாயகனாக அறிமுகமானார்.  இப்படம் வெற்றி பெறவே, ஆனந்தனை நாயகனாக்கி கொங்கு நாட்டு தங்கம் படத்தை எடுத்தார். தொடர்ந்து ஏவிஎம்மின் வீரத்திருமகன் படத்தில் நடித்தார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய முதல் படம் இது.

முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை

தமிழிலும், மலையாளத்திலும் சில ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த ஆனந்தன், அதன்பின் எம்.ஜி.ஆருடன் நீரும் நெருப்பும் படத்திலும், ஜெய்சங்கருடன் பொண்ணு மாப்ளே, நான்கு கில்லாடிகள், சிஐடி சங்கர், கன்னித் தீவு ஆகிய படங்களில் நடித்தார். மேலும் ரஜினியுடன் நான் போட்ட சவால், தனிக்காட்டு ராஜா, அடுத்த வாரிசு படங்களிலும், விஜயகாந்தின் ஊமை விழிகள், செந்தூரப்பூவே படங்களிலும் நடித்தார்.

இவரது வாரிசு யாரென்றால் 80-90 காலகட்டங்களில் பல கிளப் பாடல்களில் கவர்ச்சி நடனம் ஆடி இளசுகளை கட்டிப் போட்ட ராத்திரி நேரத்துப் பூஜையில் பாடல் புகழ் டிஸ்கோ சாந்தி தான். மேலும் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியான லலிதா குமாரியும் இவரது மகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.