முள்ளும் மலரும் படத்தைப் பார்த்துப் பிரமித்த எம்.ஜி.ஆர்.. விமர்ச்சித்த மகேந்திரனை உச்சி நுகர்ந்த பெருந்தன்மை!

எழுத்துத் துறையில் தீரா ஆர்வம் கொண்ட இயக்குநர் மகேந்திரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை விழா ஒன்றிற்கு எம்.ஜி.ஆர் வந்துள்ளார். அப்போது அவர் முன்னிலையிலேயே சினிமா பற்றி கடுமையாக விமர்ச்சித்தார் மகேந்திரன். 3 நிமிடம் என ஒதுக்கப்பட்ட அவரின் பேச்சு இறுதியில் 45 நிமிடங்களாக நீடித்தது. அதுவரை தான் பார்த்த சினிமாக்களை கடுமையாக விமர்சித்து பேசிய மகேந்திரன் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்தார்.

பின் சட்டம் பயில்வதற்காக சென்னை வந்தவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆரைப் பார்த்து அவரின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்திற்காக திரைக்கதை, வசனம் எழுதும் பணியில் இருந்தார்.  அதன்பின் பல படங்களில் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் பணியாற்றி முள்ளும் மலரும் என்ற படத்தை இயக்கியனார். ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு நடிப்பில் வெளிவந்த இப்படம் ரஜினி என்னும் அற்புதமான நடிகனை உலகிற்குக் காட்டியது.

இந்தப் படத்தின் பிரத்யேக காட்சியை எம்.ஜி.ஆர் பார்த்து படம் முடிந்தவுடன் இவரை ஆரத் தழுவிக் கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் kகேந்திரனிடம் பேசியது, “ “உண்மை யான சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கல்லூரியில் நீங்கள் பேசியதை இன்று நடை முறைப்படுத்தி மிகப்பெரும் வெற்றி பெற்றுவிட்டீர்கள். நல்ல சினிமா பற்றிய உங்களின் கனவு மட்டும் அல்ல; எனது எதிர்பார்ப்பும் முழுமையாக நிறைவேறி விட்டது. நமது சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நான் உங்களுக்குச் சொன்னது இன்று பலித்து விட்டது. இனி புதிய புதிய சோதனைகளைச் செய்து, மேலும் மேலும் சினிமா வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து, தமிழ் சினிமாவைப் பெருமைப் படுத்துவீர்கள் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு’ என்று கூறினாராம்.

நடிக்காமல் போன படமே இத்தனையா..? மதுரைக்காரரு பெரிய ஆளுதான் போல..

மேலும் இதனையடுத்து இயக்கிய “நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்திற்கு மூன்று தேசிய விருது கள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற மகேந்திரன், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், அவரைச் சந்தித்து அவரது காலடியில் விருதினைச் சமர்ப்பித்து, “காரைக்குடியில் இருந்த நான் டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்…’ என்று  கூறி எம்.ஜி.ஆரிடம் ஆசி பெற்றிருக்கிறார்..

பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், “குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமை யால் வந்தது. ஆனால் ஒன்று நிச்ச யம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமா வில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள்’ என்று வாயார ஆசீர்வதித்தாராம்.

உண்மைதான் தமிழ் சினிமாவில் உதிர்ப்பூக்கள், ஜானி, முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கை கொடுக்கும் கை, நண்டு உள்ளிட்ட பொக்கிஷப் படங்களை அழித்து யதார்த்த சினிமாவிற்கு வித்திட்ட புகழ் இயக்குநர் மகேந்திரனையே சாரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.