துல்கர் சல்மான் பட நாயகியை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேற லெவல் பிரபலமாகி விட்டார். தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில் இதர மொழி படங்களும் அடங்கும். அந்த…

Dulquer Salmaan - Sivakarthikeyan

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து வேற லெவல் பிரபலமாகி விட்டார். தொடர்ந்து புதுப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதில் இதர மொழி படங்களும் அடங்கும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

அந்த வகையில் தெலுங்கில் ஜதிரத்னலு படம் மூலம் பிரபலமான இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாராம். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக நாராயன் தாஸ் நாரங் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான், சிங்கப்பாதை உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படங்களை முடித்த பின்னர் அனுதீப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சிவகார்த்திகேயன் தற்போது இதர மொழி படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட கமல்! தட்டி தூக்கிய ஆக்சன் கிங்!!

அனுதீப் இயக்கும் இந்த பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜேடியாக நடிகை ரித்து வர்மா நடிக்க உள்ளாராம். இவர் இறுதியாக துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரித்து வர்மா ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

சிவகார்த்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதோடு சில படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகிறார். முன்னதாக அவர் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் ஒரு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திலும், சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் படத்திலும் தலா ஒரு பாடல்களை எழுதி உள்ளாராம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன