இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. அந்த அளவு நாம் செய்யும் தான தர்மங்களை விளம்பரப்படுத்த கூடாது என்பது நமது முன்னோர்கள் சொல்லிவைத்த ஒரு விசயம்.
சமீபத்திய கொரோனா லாக் டவுனில் ஊரடங்கு நிகழ்வால் பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருவோர ஆதரவற்றோர் , விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு உணவில்லை என பல தன்னார்வ அமைப்புகள் உணவு சமைத்து வழங்கி வருகின்றன.
பலர் இதை விளம்பரப்படுத்தி கொள்வது இல்லை . சிலர் செய்யும் தான தர்மங்களை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு யாராவது ஒரு நல்ல மனிதர் புகைப்படம் எடுத்து வாட்ஸப்பிலும், பேஸ்புக்கிலும் போட்டு விடுகிறார் அது தவறில்லை . ஆனால் தானாக விளம்பரப்படுத்தும் நோக்கில் சிறு உதவி செய்து விட்டு இல்லாத வறியவர்களுக்கு ஏதாவது கொடுத்து விட்டு செல்ஃபி எடுத்து போடுவது , அதிகரித்து வருகிறது.
இதை சமூக வலை தளங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர். சேவை நோக்கோடு செய்பவர்களை பார்த்து அடுத்தவர்கள் மகிழ்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டால் தவறில்லை தானாக எடுத்து சுய விளம்பரம் தேடுவது தவறு என கருத்துக்கள் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
இதை ஒட்டி ஒரு சின்ன வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. உணவு கொடுத்து அதை வாங்கும் இளைஞர் எவ்வளவு கூச்சப்பட்டாலும் செல்ஃபி எடுத்து வீடியோ எடுத்து பேக்ரவுண்ட்ல என்ன பாட்டு போடலாம் என அலையும் சுய விளம்பர பிரியர்களை கேலி செய்யும் விதமாகவும் கண்டிக்கும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.
கஷ்டப்பட்டு உழைத்தவர் இப்போதிருக்கும் கடினமான பசி சூழ்நிலையில் அடுத்தவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்கும் மன நிலையில்தான் இருப்பர். அவர்களை இது போல புகைப்படம் எடுத்தால் அவர்களது கெளரவம் அவர்களை தடுக்கும் என்பது நிச்சயம். அது சம்பந்தமான ஒன்றை நகைச்சுவையாககவும் எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்த வீடியோ.
அதன் லிங்க் இதோ