மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்த வரையில் அவரை ஒரு மாஸ் ஹீரோவாகவே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் நடிப்பு முகம் தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர். வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன் நாடகங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இருந்த போதிலும் சினிமாவில் நடிக்கும் போது அவருக்கு நடிப்புத் திறனுக்கு தீனி போடும் படங்கள் ஏனோ வாய்க்கவில்லை. ஆனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 1971-ல் ரிக்ஷகாரன் படத்திற்காகப் பெற்றார்.
கிட்டத்தட்ட நாடகங்களில் 30 ஆண்டுகாலம், சினிமாவில் 10 ஆண்டுகாலம் நடித்ததற்குப் பிறகே அவர் இயக்குநராகும் முயற்சியில் இறங்கினார். அவரே தயாரித்து, இயக்கி, நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்தான் நாடோடி மன்னன். அப்போது எல்லாரும் எம்.ஜி.ஆர் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவே பேச்சு எழுந்தது. தான் சினிமாவில் சம்பாதித்த எல்லா பணத்தையும் நாடோடி மன்னனில் போட்டதோடு, வீட்டின் மீது கடன் வாங்கி அந்த படத்தை எடுத்தார். மேலும் இப்படத்தை எடுக்கும்போது அவர் பல பிரச்சனைகளையும் சந்தித்தார். ஆனாலும், வெற்றிகரமாக எடுத்து முடித்து வெளியிட்டார்.
அதன்பின் உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அதேபோல், படப்பிடிப்புக்கு இயக்குனர் வர தாமதமானால் அவரின் வேலையை எம்.ஜி.ஆரே செய்துவிடுவார்.
ஒருமுறை நிருபர் ஒருவர் நாடோடி மன்னன் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் ‘இரண்டு டங்களில் நடித்துவிட்டு ஒருவர் இயக்குனராகி விட முடியுமா?’ என கேட்க அதற்கு எம்.ஜி.ஆர் “நீங்கள் என்னை மனதில் வைத்துதான் இந்த கேள்வியை கேட்கிறீர்கள் என எனக்கு தெரியும்.
கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்.. உலக நாயகனின் நிழலாகத் திகழ்ந்தவர் இவர்தானா?
நான் இயக்குனர் ராஜா சந்திரசேகரிடம் பல சினிமா தொழில்நுட்பங்களை கற்றவன். இயக்கம் என்பது சுலபம் அல்ல. ஒரு படத்தின் கதை, வசனத்தை பற்றி கதாசிரியரை விட அந்த இயக்குனருக்கு அதிகம் தெரிந்திருக்க வேண்டும். இதுமட்டுமல்லாது தான் மனதில் கற்பனை செய்து பார்த்த காட்சிகள் திரையில் எப்படி வரும்.. எப்படி எடுத்தால் அது சரியாக இருக்கும் என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு காட்சிக்கு நடிகர்கள் எப்படி நடிக்க வேண்டும், அவர் எதிர்பார்த்த நடிப்பு நடிகர்களிடம் வரவில்லை என்றால் அதை அவர்களிடம் வாங்க தெரிந்தவராக இயக்குனர் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எடுக்கப்படும் காட்சி படத்தில் எப்படி அமையும் என்பதை முன்கூட்டியே சிந்திக்க தெரிந்த ஆற்றல் பெற்றவராக ஒரு இயக்குனர் இருக்க வேண்டும்” என தெளிவாக விளக்கி சொன்ன எம்.ஜி.ஆரின் பதிலில் வாயடைத்துப் போய் விட்டாராம் அந்த நிருபர்.