நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று அன்றைய முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருமே விரும்பினர். அவ்வாறு சிவாஜியுடன் நடிக்க முதல்முறையாக கிடைத்த வாய்ப்பை ரஜினிகாந்த் பயன்படுத்தினார் என்றால் அதுதான் ஜஸ்டிஸ் கோபிநாத்.
ரஜினிகாந்த் தனியாக பல திரைப்படங்களில் வில்லன், நாயகனாக நடித்து கொண்டிருந்தாலும் சிவாஜியுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அவரது ஆசைக்கு ஏற்ப அமைந்த படம் தான் ஜஸ்டிஸ் கோபிநாத். இந்த படத்தில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்திருப்பார்.
இந்த படத்தின் கதை என்னவெனில் சிவாஜி ஒரு நேர்மை தவறாத நீதிபதியாக இருப்பார். ஆனால் சந்தர்ப்பவாசத்தாலும் போய் சாட்சிகளாலும் அவர் குற்றம் செய்யாத முருகன் என்பவருக்கு தண்டனை தரும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் முருகனின் மனைவி அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொள்வார்.

இதனை அறிந்த சிவாஜி தன்னுடைய தீர்ப்பால் தான் அந்த குடும்பம் சின்னாபின்னாமானது என்பதை அறிந்து முருகனின் மகனை தன் வீட்டிற்கு கொண்டு வந்து வளர்ப்பார். அந்த மகன் தான் ரஜினியாக வளருவார். அவருக்கு ஜூடோ எல்லாம் கற்றுத்தந்து ஒரு வீரனை போல் வளர்த்திருப்பார்.
இந்த நிலையில் தான் ரஜினி சுமித்ராவை காதலிப்பார். ஆனால் சுமித்ராவின் தந்தை ரஜினிக்கு தனது பெண்ணை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்க மாட்டார். இந்த நிலையில் தான் தண்டனை முடிந்து ரஜினியின் உண்மையான அப்பா முருகன் விடுதலை ஆவார். தனது மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பதையும் தனது மகன் நீதிபதியிடம் வளர்ந்து கொண்டிருப்பதையும் அறிந்து கொள்வார். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக கேஆர் விஜயா, ரஜினிகாந்த் ஜோடியாக சுமித்ரா நடித்திருப்பார்கள். முருகன் கேரக்டரில் மேஜர் சுந்தரராஜன் நடித்து இருப்பார். இந்த படம் கடந்த 1978 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. யோகானந்த் இயக்கத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் கதையில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவானது. இந்த படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது.
ரஜினி நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகர்.. துணிச்சலாக ரீமேக் செய்த விசு..!

ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு காரணமும் உண்டு. இந்த படம் வெளியான ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் நடித்த ப்ரியா என்ற திரைப்படம் வெளியானது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் ரஜினியின் ரசிகர்கள் இந்த படத்தை நோக்கி சென்றார்கள். அதேபோல் ஜஸ்டிஸ் கோபிநாத் வெளியான சில நாட்களில் சிவாஜி கணேசன் நடித்த 200வது படமான திரிசூலம் திரைப்படம் வெளியானது. இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனதால் சிவாஜியின் ரசிகர்கள் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை கண்டு கொள்ளவில்லை. எனவே சிவாஜி, ரஜினி ஆகிய இரு ரசிகர்களாலும் கண்டுகொள்ளப்படாத படமக ஜஸ்டிஸ் கோபிநாத் அமைந்தது.
நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!
சிவாஜி, ரஜினி ஆகிய இருவரும் இணைந்த முதல் படம் தோல்வி அடைந்தாலும் அதனை அடுத்து அவர்கள் இருவரும் இணைந்த நான் வாழவைப்பேன், படிக்காதவன் விடுதலை மற்றும் படையப்பா ஆகிய நான்கு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
