பிக் பாஸ் 8 : 25 வருசமா இப்படி தான் சாப்பிடுறேன்.. 50 வயதிலும் இளமை.. ரஞ்சித் டயட் ரகசியம்.. வியந்த அருண்..

Ranjith and Arun Prasath : பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என வரும்போது அதில் இளம் வயதினர் தொடங்கி ஒரு 50 முதல் 55 வயதை நெருங்கிய பிரபலங்களும் போட்டியாளர்களாக களமிறங்குவார்கள். சுரேஷ்…

ranjith fitness secret

Ranjith and Arun Prasath : பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என வரும்போது அதில் இளம் வயதினர் தொடங்கி ஒரு 50 முதல் 55 வயதை நெருங்கிய பிரபலங்களும் போட்டியாளர்களாக களமிறங்குவார்கள். சுரேஷ் சக்கரவர்த்தி, மோகன் வைத்யா என நிறைய போட்டியாளர்கள் தமிழ் பிக் பாஸ் சீசனில் அதிக வயதுள்ளவர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அந்த வரிசையில் இந்த சீசனில் உள்ளே வந்த போட்டியாளர் தான் நடிகர் ரஞ்சித்.

இவர் கடைசியாக இயக்கி நடித்த திரைப்படத்தின் மீது விமர்சனங்கள் அதிகமாக இருக்க, அதே சூட்டோடு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தார். ஆரம்பத்தில் இவர் மற்ற இளைஞர்களுடன் எப்படி ஒத்துப் போகப் போகிறார் என்பது பற்றி கேள்விகள் அதிகமாக இருந்தது. ஆனால் ஒரு சிலர் அவரை ஃபேக் என்று கூறினாலும் இன்னொரு பக்கம் அனைவரையும் மிக அன்பாகவும் கவனித்தும் பேசியும் வருகிறார் ரஞ்சித்.

ஒரு சில நேரங்களில் மிகுந்த வெள்ளந்தியாகவும் ரஞ்சித் இருந்தாலும் அவரது கேம் ப்ளான் கொஞ்ச நாள் சென்றால் தான் தெரியவரும் என்றும் ஒரு கூட்டம் தெரிவித்து வருகின்றது. இப்படியாக ரஞ்சித்தை சுற்றி பல்வேறு விஷயங்கள் இருக்க, சுமார் 50 வயதை கடந்த அவர் பிட்னஸில் சிறப்பாக இருப்பதும் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்தில் ரஞ்சித்தின் பிட்னஸை வியந்து பார்த்து அருண் பிரசாத் கேட்ட டயட் ரகசியமும் அதற்கு ரஞ்சித் சொன்ன பதிலும் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் உங்கள் உடலை நீங்கள் சிறப்பாக கவனித்து வருகிறீர்கள் என ரஞ்சித்தை பார்த்து அருண் பிரசாத் ஆச்சரியத்துடன் கேட்கிறார். தொடர்ந்து பேசும் ரஞ்சித், தனது வயது என்ன என்பதை கணிக்கும் படி அருண் பிரசாத்திம் கேட்கிறார்.

அப்போது அவரோ 50 என சொன்னதுன், ‘எப்படி இந்த வயதிலும் மி ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?. இன்னும் இளமையாக தான் இருக்கிறீர்கள். அதோ ரகசியம் என்ன?. ஆரோக்கியமாகவும், ஆக்டிவாவும் இருப்பதற்கான காரணம் என்ன?’ என்றும் வியப்புடன் கேட்கிறார் அருண் பிரசாத்.

தற்கு பதில் சொல்லும் ஞ்சித், “எனக்கென்று உணவில் எந்த ரகசியமும் கிடையாது. நான் முன்பு அதிகம் சாதம் சாப்பிடுவேன். ஆனால் இப்போது அதை கொஞ்சம் குறைத்து விட்டேன். அதே போல, நீண்ட நாட்களாக எண்ணெய் பொருட்களையும் அதிகம் டுத்துக் கொள்வது கிடையாது. தோசையில் கூட அதிக எண்ணெய் ஊற்றாமல் உண்பேன். எண்ணெய் நிறைய எடுத்தால் இன்று மாரடைப்பே வருகிறதுஎன ரஞ்சித் சொல்கிறார்.

மேலும் சுமார் 25 வருடங்களாக இந்த டயட் பழக்கத்தை ரஞ்சித் கடைபிடித்து வருவதாக கூற, அவரது இளமை ரகசியம் அறிந்து ஒரு நிமிடம் வியந்து போனார் அருண் பிரசாத்.