ராமராஜன் 80, 90களில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். அதன்பிறகு நீண்ட இடைவெளி விழுந்தது. இதற்கு என்ன காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரொம்ப எளிமையாகப் பழகக்கூடியவர். பத்திரிகையாளர்களுக்கு நல்ல மதிப்பைத் தருபவர். அவர் 44 படங்களில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். 50 படங்கள் வரை ஹீரோவாக நடிப்பது தான் அவரது விருப்பமாம். அதற்காகவே மார்க்கெட் வீழ்ச்சியின் போது அவருக்கு வந்த அண்ணன், வில்லன் கெட்டப்புகளைத் தவிர்த்து வந்தாராம். அதனால் தான் இந்த நீண்ட இடைவெளி என்கிறார் பிஸ்மி.
ரஜினி படங்கள் ரிலீஸாகும் போது ராமராஜன் படங்கள் வந்தால், ரஜினியே போன் போட்டு உங்க படத்தைக் கொஞ்சம் தள்ளி வைங்கன்னு சொல்வாராம். டி.ராஜேந்தர், ராஜ்கிரண் படங்களின் ரிலீஸைத் தள்ளி வைக்கச் சொன்னாராம். ஆனால் கமல் அப்படி நினைத்து இருப்பாரா என்று தெரியவில்லை என்கிறார் பிஸ்மி.
கமலோட பார்வையில் ராமராஜன் ஒரு நடிகராகவே தெரிந்து இருக்க மாட்டார். அல்லது அவரை இவர் போட்டியாளராகவும் நினைத்திருக்க மாட்டார். அவரோட படங்கள் இந்த அளவுக்கு ஓடுகிறதா என்று கேலியாகவும் பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
35 படங்கள் வரை ராமராஜனுக்கு கிராமங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரகாட்டக்காரன் படம் ஏ, பி, சி என அனைத்து சென்டர்களிலும் சக்கை போடு போட்ட படம். அதனால் தான் அதற்கு அவ்வளவு பெரிய வெற்றி. ராமராஜனின் 40 படங்களுக்கும் புதுமுகத் தயாரிப்பாளர்கள் என்பது தான் ஆச்சரியம். ஏவிஎம்முக்கே கால்ஷீட் தர மறுத்தாராம்.
காரணம் நானும் உங்க கிட்ட வந்துட்டா சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் எங்கே போவாங்கன்னு அவர்களுக்காகப் படம் நடிச்சாராம். பணமே இல்லாத நிலையில் உள்ள சாதாரண தயாரிப்பாளர்களுக்கும் படம் நடிக்க சம்மதித்தாராம். சாமானியன் படத்தைப் பொறுத்தவரை அது மிகப்பெரிய வெற்றி பெறும் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஏன்னா இன்றைக்கு ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. இந்தப் படத்தில் ஒரு அற்புதமான கருத்து இருந்தால் அது மக்களின் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது. இன்னும் ராமராஜன் கொஞ்சம் உடல்நிலையை பிட்டாக வைத்து இருந்தால் இன்னும் படவாய்ப்புகள் வந்து இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… பாரதிராஜா படத்தில் அறிமுகம்.. ரஜினி, கமலுக்கு ஜோடியாக பல படங்கள்.. ஹிந்தியில் ஒரு ரவுண்டு வந்த நடிகை..
செண்பகமே செண்பகமே படம் முழுவதும் வெறும் டவுசர், துண்டு தான் அவரது காஸ்டியூம். அந்த வகையில் ராமராஜன் காஸ்டியூம், ஹேர்ஸ்டைலை எல்லாம் பற்றிக் கவலைப்படாதவர். எம்ஜிஆர் மாதிரி டிரஸ் பண்ணி நடிக்கக்கூடியவர். அவரது ரசிகர்களுக்கு ராமராஜன் திரையில் வந்தாலே போதும் என்று தான் இருந்தது அந்தக் காலகட்டத்தில்.
ஆனால் இப்போது உள்ள தலைமுறைக்கு இது எடுபடுமா? சாமானியன் படத்தில் அவரது தோற்றம் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் போல தான் உள்ளது. அப்படி ஒரு டிரெண்ட் செட்டுக்குள் அகப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.