நட்புக்கு இலக்கணம் படைத்த படங்கள் எல்லாமே தமிழ்சினிமாவில் சூப்பர்ஹிட்டுகள் தான். எந்தக் கதாநாயகன் நடித்தாலும் நட்பு என்று வந்துவிட்டால் அது ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் தரும் கதையாகி விடும்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு. நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவேன்னு பாடுவாரு. தளபதி படத்துல ரஜினியுடன் இணைந்து மம்முட்டி கலக்கி இருப்பார். நட்புக்கு உதாரணமான படம் என்றால் அது இதுதான்.
நிஜ வாழ்க்கையிலும் நண்பர்களுக்கு அவர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார். ரஜினியைப் பொருத்தவரை அவர் இந்த அளவுக்கு சினிமாவில் வந்து சாதிக்கக் காரணமே அவரது நண்பர் தான் என்றால் அது மிகையாகாது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ஒரு விஷயம் நமக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அது இதுதான்.
நட்புங்கற விஷயத்தை ரஜினி எங்கேயுமே விட்டுக் கொடுக்க மாட்டாரு. அதைப் பெரிசா பேசுவாரு. அவரு அடிக்கடி சொல்வாரு. குருவுக்கு அடுத்தபடியா நண்பர்கள் மிக மிக முக்கியம்னு சொல்வாரு. ஒரு மனைவியைத் தாண்டி நண்பர்களோட சப்போர்ட் தான் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்.
ராஜ்பகதூர்ங்கற நண்பன் கையில 1500 ரூபா கொடுத்து ‘நண்பா சென்னையில போய் நடி… நிச்சயம் பெரிய ஆளா வருவ’ன்னு கொடுத்து அனுப்பினான். அவன் அன்னைக்கு அப்படி சொல்லலைன்னா நான் வந்து கண்டக்டராகவோ அல்லது ஒரு பஸ் ஓனராகவோ அல்லது ஒரு பஸ்ஸை லீசுக்கு எடுத்தோ நடத்திக்கிட்டுத் தான் இருந்துருப்பேன்.
இல்லன்னா வேற ஏதாவது ஒரு வேலை பெங்களூருல பார்த்துக்கிட்டு இருந்துருப்பேன். அதுக்குக் காரணம் அந்த ராஜ்பகதூர்தான். ‘நண்பா உனக்கு என்ன வேணும்? ஏதாவது செய்யணுமா’ன்னு கேட்பாரு.
ஆனா ‘எனக்கு எதுவும் வேணாம். இப்போதைக்கு ஆண்டவன் தேவையானதை எல்லாம் கொடுத்துருக்கான். அப்படி ஏதாவது தேவைன்னா நானே உங்கிட்ட கேட்டுக்கறேன்’னு சொன்னாராம் அந்த ராஜ்கபூர்.
மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
அதே போல கமல், ரஜினி இருவரது நட்பில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படம் யாராலும் மறக்கவே முடியாது. எங்கேயும் எப்போதும் எந்த ஒரு பாடல், சம்போ சிவ சம்போ என்ற பாடல் மனதை சுண்டி இழுக்கச் செய்யும். அந்தக்காலத்தில் கமல் படத்தில் ரஜினி வில்லனாகவே ஆரம்ப காலகட்டத்தில் நடித்து வந்தார்.
அதன்பிறகு கமல் ரஜினியின் திறமையை அறிந்த நீ தனியாக நடி. அப்போது தான் நாம் இருவரும் முன்னேற முடியும். நாம் சேர்ந்து நடித்தால் தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபம் என்று அறிவுரை கூற அதை தன் ஆருயிர் நண்பனான கமலே சொன்னதற்காக ரஜினியும் தட்டாமல் கேட்டார்.
அப்படியே அவரும் வளர்ந்து வந்தார். அவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே அவர் சூப்பர்ஸ்டார் ஆனார். அது தான் பைரவி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரஜினி, கமல் நட்பு இன்றும் அதே போல இறுக்கமாகவே உள்ளது.