சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெய்லர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் கர்நாடக நடிகர் சிவராஜ்குமார் என பல முன்னணி ஹீரோக்கள் இணைந்து மல்டி ஸ்டார் படமாக இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது ரஜினி சொன்ன குட்டி ஸ்டோரியை யாராலும் மறக்க முடியாது. காக்கா, கழுகை மையமாக வைத்து ரஜினி சொன்ன அந்த குட்டிஸ்டோரி தளபதி விஜய் மையமாக வைத்து கூறியது போல சில கருத்துக்கள் சர்ச்சையாக பரவி வந்தது. அதை தொடர்ந்து தளபதி விஜய் சமீபத்தில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது அதேபோன்று காக்கா, கழுகு, காடு என ஒரு குட்டி ஸ்டோரீஸ் கூறி ரசிகர்களுக்கு தரமான ஒரு பதிலை அளித்தார்.
தமிழ் சினிமாவில் இது போன்ற சக நடிகர்களுக்கிடையே போட்டி நிலவுவது வழக்கமான ஒன்று. அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது தான் இந்த போட்டியின் மையக்கருத்து. இப்படி இருக்க தளபதி விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர் தான் என்று தெளிவாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த காக்கா, கழுகு சர்ச்சையில் ரஜினி மற்றும் விஜய்க்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் ரத்னகுமார். இவர் மேயாத மான் ஆடை, குளு குளு போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் ஒரு சிறப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம், லியோ திரைப்படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையில் இயக்குனர் ரத்னகுமார் பங்கு பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் இவர் தீவிர தளபதி ரசிகர் என்பதை பல மேடைகளில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது கழுகு எவ்வளவு தான் மேலே பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் வெளிப்படையாக ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சைக்கு உள்ளானார். இந்த பதிவால் கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ரத்னகுமாரை கண்டித்து வந்தனர்.
தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க விரும்பி ரிஜெக்சன் ஆன ஹீரோயின்கள் லிஸ்ட்!
இந்த சூழ்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தை ரஜினியுடன் இணைந்து இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் ரத்தினகுமார் இருக்க வாய்ப்புள்ளதா என்பது ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. தலைவர் 171 வது திரைப்படத்தில் ரத்தினகுமார் இருக்கும் பட்சத்தில் அது ரஜினி மற்றும் லோகேஷுக்கு இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடக்கூடாது. ஆனால் இந்த படத்தில் ரத்னகுமார் அவர்களின் பங்களிப்பு இருக்குமே தவிர படப்பிடிப்பு தளங்களில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.
அதற்குக் காரணம் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் லோகேஷ் தயாரிப்பில் ரத்னகுமார் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் பிசியாக படப்பிடிப்புகளில் பிசியாகும் பட்சத்தில் ரத்னகுமார் தலைவர் 171 வது படத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.