தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க விரும்பி ரிஜெக்சன் ஆன ஹீரோயின்கள் லிஸ்ட்!

தளபதி விஜய் லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பூஜை விழா வீடியோவை ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோவில் இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரபுதேவா, நடிகர் பிரசாந்த், நடிகை லைலா, நடிகை சினேகா, நடிகர் மோகன், மலையாள நடிகர் ஜெயராம், அஜ்மல் யோகி பாபு, டிடிவி கணேஷ், பிரேம்ஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்தில் மைக் மோகன் வில்லனாக நடிக்க உள்ளார். 80, 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த மோகன் தற்பொழுது முதல் முறையாக தளபதி விஜய் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதால் இவருக்கு இரண்டு கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு சென்றுள்ளது.

தற்பொழுது இந்த படப்பிடிப்புகளில் விஜய் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒன்று அப்பா விஜய் மற்றொன்று மகன் விஜய் ஆக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இளமையான விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தளபதி விஜய் அவர்களின் முகம் ஸ்கேன் செய்யப்பட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

மேலும் இந்த திரைப்படம் டைம் ட்ராவல் மையமாக வைத்து அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் திரைப்படத்தில் இரண்டு விஜய் உள்ள நிலையில் ஒரு அப்பா விஜய் அவருக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகன் விஜய் மற்றும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் விஜய்யின் தங்கச்சி கதாபாத்திரம் படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் இந்த தங்கச்சி கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இயக்குனர் கூடுதல் கவனத்தில் இருந்துள்ளார். இதற்காக பல நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு இறுதியில் ஒரு கதாநாயகி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சம்பவம் செய்யும் கமல்! அடுத்தடுத்து வெளியாகும் நான்கு திரைப்படங்கள்!

முதலில் இந்த தங்கையாக நடிக்க இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஜெய் பீம் நடிகை லிஜோமோல் ஜோஸ் ஆடிஷனல் கலந்துகொண்டு அவராலும் அதில் வெற்றி பெற முடியவில்லை. அதை தொடர்ந்து நடிகை கயல் ஆனந்தி, ரித்து வர்மா என பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் யாரின் நடிப்பும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஒத்துப் போகவில்லை என்ற காரணத்தினால் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

அதைத்தொடர்ந்து லவ் டுடே படத்தின் கதாநாயகி இவானா ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் கொடுத்த முக பாவனைகள், முக அசைவுகள் இயக்குனருக்கு திருப்தி அடையும் பட்சத்தில் விஜய்க்கு தங்கச்சியாக இவானா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து ஆக்சன் படங்களுக்கு மத்தியில் தங்கை சென்டிமென்டில் களமிறங்கும் விஜய்யின் 68 திரைப்படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews