ரஜினிகாந்த் தொலைத்த விலைமதிப்பில்லா பொருள்.. படப்பிடிப்பு தளத்தில் பதட்டம்.. இரவு முழுவதும் தேடுதல் வேட்டை.. கடைசியில் என்ன நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படப்பிடிப்புகள் என்றாலே சுவாரஸ்யங்களுக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் குறைவிருக்காது. அப்படியான ஒரு மறக்க முடியாத சம்பவம், அவரது நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது. ரஜினிகாந்தின் தனிப்பட்ட ஆன்மீக…

rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படப்பிடிப்புகள் என்றாலே சுவாரஸ்யங்களுக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும் குறைவிருக்காது. அப்படியான ஒரு மறக்க முடியாத சம்பவம், அவரது நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது. ரஜினிகாந்தின் தனிப்பட்ட ஆன்மீக பற்றுதலையும், படக்குழுவினருடனான அவரது நெருக்கமான பிணைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அது.

தொலைந்த ருத்ராட்சம் – பதறிய ரஜினி:

ரஜினிகாந்த் தன் கழுத்தில் எப்போதுமே ருத்ராட்சம் அணிந்திருப்பார். அதை அவர் வெறும் ஆபரணமாக அல்லாமல், தனது ஆன்மீக வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதுபவர். எந்த சூழலிலும் அதை அவர் கழற்றுவதில்லை. அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் ஒரு நாள், எதிர்பாராதவிதமாக அவரது அந்த ருத்ராட்சம் தொலைந்து போனது. இந்த சம்பவம் ரஜினிகாந்த்தை மிகவும் பதட்டமடைய செய்தது. உடனடியாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர், தனது ருத்ராட்சத்தை தேட தொடங்கினர்.

இரவெல்லாம் தேடிய படக்குழு:

ரஜினிகாந்தின் பதட்டத்தையும், ருத்ராட்சத்தின் மீதான அவரது நம்பிக்கையையும் உணர்ந்த படக்குழுவினர், தாமாகவே முன்வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். படப்பிடிப்பிற்காக இரவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விளக்குகளையும் ஆன் செய்துவிட்டு, படக்குழுவினர் அனைவரும் ரஜினியுடன் சேர்ந்து இரவு முழுவதும் அவரது ருத்ராட்சத்தைத் தேடினர். யாரும் தூங்காமல், ரஜினியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருடன் நின்ற இந்த சம்பவம், ரஜினிகாந்தின் மீது படக்குழுவினருக்கு இருந்த அன்பையும், மரியாதையையும் எடுத்துக்காட்டியது. இறுதியாக ருத்ராட்சம் கிடைத்ததா என்பது குறித்த தகவல் இல்லை என்றாலும், இந்த நிகழ்வு திரையுலகில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமாக பேசப்பட்டது.

ரஜினியின் ருத்ராட்சப் பற்று:
இமயமலை மட்டுமன்றி, எந்த ஆன்மீக ஸ்தலங்களுக்குச் சென்றாலும் அங்கிருந்து ருத்ராட்சங்களை வாங்கி வந்து சேர்த்து வைப்பது ரஜினியின் வழக்கம். அவரது வீட்டில் ஏராளமான ருத்ராட்சங்கள் இருப்பதாகவும், தன்னை பார்க்க வரும் சிலருக்கு அவர் ருத்ராட்சங்களை அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் லிவிங்ஸ்டன் கூட ரஜினிகாந்திடம் இருந்து ஒரு ருத்ராட்சத்தை பரிசாக பெற்றதாக ஒரு தகவல் உண்டு.

ரஜினிகாந்த் ருத்ராட்சம் அணிய தொடங்கிய பிறகு, தமிழகத்தில் உள்ள ஏராளமான இளைஞர்களும் ருத்ராட்சம் அணிய தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, அவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்பதை காட்டுகிறது.