ரஜினி ரசிகர்களுக்கே திருப்தியில்லையா? லோகேஷின் கூலி திரைவிமர்சனம்..!

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். அமெரிக்காவில் இந்தியாவை விட முன்னதாகவே திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை லோகேஷின் ஒரு “சறுக்கல் என்றே…

coolie

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
அமெரிக்காவில் இந்தியாவை விட முன்னதாகவே திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்தை லோகேஷின் ஒரு “சறுக்கல் என்றே கூறலாம்.

தலைவர் ரஜினியின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் கம்பீரமான நடிப்பு, குறிப்பாக இளமைத் தோற்றத்தில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகளில், ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பகுதிகள் சிலருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்துவதற்கு அது மட்டும் போதுமானதாக இல்லை.

படத்தில் பல முன்னணி நடிகர்கள் இருந்தபோதிலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜால் அந்த கதாபாத்திரங்களைச் சிறப்பாக பயன்படுத்த முடியவில்லை. அவை தனித்து நிற்க தவறிவிட்டது.

லோகேஷ் கனகராஜின் வழக்கமான விறுவிறுப்பான திரைக்கதை இந்த படத்தில் இல்லை. படத்தின் முதல் பாதி யூகிக்கக்கூடியதாகவும், மெதுவாகவும் நகர்வது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் “விண்டேஜ் ஸ்டைல்”, ஆக்ஷன், மற்றும் திரையில் அவரது பிரசன்னம் ஆகியவை வெகுவாக கவர்ந்துள்ளன. “இது ரஜினிகாந்தின் ஒன்-மேன் ஷோ” என்றே குறிப்பிடலாம். ரஜினிகாந்தின் நடிப்பு ‘கபாலி’ படத்திற்குப்பிறகு அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்று.

ஃபிளாஷ்பேக் காட்சிகள்: படத்தில் ரஜினியின் இளமையான தோற்றத்துடன் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள், அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளன. இந்த “டி-ஏஜிங்” தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் சிறந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சியும், நாகார்ஜுனாவின் அறிமுக காட்சியும் மிகவும் ஸ்டைலாக அமைந்திருப்பது இருதரப்பு ரசிகர்களுக்கு பெரும் விருந்து.

நடிகர் நாகார்ஜுனா, பயங்கரமான கேங்ஸ்டர் சைமன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல, சௌபின் ஷாஹிரின் தயாள் என்ற கதாபாத்திரமும் வலுவான நடிப்பை கொடுத்துள்ளது.

படத்தின் இரண்டாம் பாதி நீளமாக உள்ளது. சில இடங்களில் திரைக்கதை குழப்பமாக உள்ளது. சௌபின் ஷாஹிரின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரச்சிதா போன்றோரின் நடிப்பும் சூப்பர்.

இருப்பினும், படத்தின் கடைசி 20 நிமிடங்களும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியும் அதிரடியான ஆக்ஷன், பிரமிக்க வைக்கும் தருணங்கள், மற்றும் லோகேஷின் தனித்துவமான ஸ்டைலில் அமைந்துள்ளது.

அனிருத் ரவிச்சந்தரின் இசை, வழக்கமாக அவரது படங்களுக்கு கிடைக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. பின்னணி இசை சராசரியாக உள்ளது மிகப்பெரிய ஏமாற்றம்.

மொத்தத்தில், ‘கூலி’ திரைப்படம் ரஜினியின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் லோகேஷின் இயக்கத்தின் ஒரு கலவையாக, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், ரஜினியின் ரசிகர்களுக்கு இது ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது.