ரஜினியின் நெருங்கிய நண்பர்.. 6 படங்களின் இயக்குனர்.. கே.நட்ராஜ் திரையுலக பயணம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் கே.நட்ராஜ். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ரஜினியின் பரிந்துரையின் பேரில் அவருக்கு சில உதவி இயக்குனர் மற்றும் இயக்குனர்…

k natraj

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் கே.நட்ராஜ். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ரஜினியின் பரிந்துரையின் பேரில் அவருக்கு சில உதவி இயக்குனர் மற்றும் இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது.

திரைப்பட கல்லூரியில் ஒரே நேரத்தில் இருவரும் படித்தாலும் ரஜினிக்கு கிடைத்த வாய்ப்புகள், கே.நட்ராஜ் அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த 1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் தான் கே நடராஜ் அவர்களுக்கு நடிப்பதற்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ரஜினியின் பைரவி, பிரியா, ராணுவ வீரன், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் கமல்ஹாசனின் உல்லாச பறவைகள், விஜயகாந்தின் கூலிக்காரன் உள்ளிட்ட பல படங்களிலும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கமல் பெயர் கமல், ரஜினி பெயர் ரஜினி, நாகேஷ் பெயர் நாகேஷ்.. சொந்த பெயரில் நடித்த படங்கள்..!

இந்த நிலையில் தான் கடந்த 1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற கதையை எழுதி ரஜினியிடம் திரைப்படம் எடுக்க அனுமதி கேட்டார். அவரும் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்து தருவதாக கூறினார். மீனா இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவருடைய அம்மாவாக அம்பிகா நடித்திருந்தார். கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரஜினியின் சில காட்சிகளால் நல்ல வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து சுரேஷ், ரேவதி நடித்த செல்வி என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது. ஆனால் அதன் பிறகு இரண்டு மனம், தலையாட்டி பொம்மைகள், செல்லக்குட்டி ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கமல், ரஜினியின் அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நடிகர்… அறிவுரையைக் கேட்டு சூப்பர்ஸ்டார் ஏற்ற சபதம் இதுதான்..!

இந்த நிலையில் தான் தனது நண்பருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ரஜினியே ஒரு கதை எழுதி அந்த படத்தை இயக்குவதற்கு கே. நடராஜ் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த படம் தான் வள்ளி. நடிகை பிரியா ராமன் இந்த படத்தில் தான் அறிமுகமானார் என்பதும் இந்த படத்தில் ரஜினியும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருப்பார்.

வள்ளி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று நடராஜுக்கு பெரும் புகழை கொடுத்தாலும் அதன் பிறகு அவருக்கு இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு தொலைக்காட்சிகளில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தது.

16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!

ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் டிவிகளில் உள்ள பல தொடர்களில் இவர் நடித்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் பிஸியாக நடித்தார்.