ரஜினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் நடிகர்களில் ஒருவர். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அப்படி அவருக்கு அமைந்த திரைப்படம்தான் பைரவி.
இவர் மேலும் முன்று முடிச்சு, முத்து, அருணாச்சலம் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரமாக வலம் வந்தார். இவரின் ஸ்டைலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தான் சினிமாவில் முன்னேற வேண்டும் என்பதையே தனது முதல் குறிக்கோளாக கொண்டிருந்தார்.16 வயதினிலே திரைப்படத்தில் இவருக்கு சம்பளமே மிகக்குறைந்த அளவுதான். ஆனால் தான் ஒரு முன்னணி நடிகனாக வரவேண்டும் என்பதால் அதை கூட பொருத்து கொண்டு தொடர்ந்து தனது நடிப்பினை மிகச்சிறந்த முறையில் வெளிக்காட்டினார்.
இவர் முன்னணி கதாநாயகனாக ஆனபின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில் நடிக்க ஆசைப்பட்டாராம். என்னதான் ஆசைபட்டாலும் அப்போது ரஜினி முன்னணி கதாநாயகனாக இருந்ததால் போதுமான அளவிற்கு கால் ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.
மேலும் அப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கவிருந்தாராம். அப்போது ரஜினி அவரிடம் 15 நாட்கள் மட்டுமே கால் ஷீட் கொடுப்பதாகவும் அதற்குள் படத்தை எடுத்து முடித்துவிடும்படியும் கூறினாராம். ஆனால் அவ்வளவும் குறுகிய காலத்தில் படத்தை இயக்கி முடிப்பது கடினமாக இருக்கும் என்பதால் எஸ்.பி.முத்துராமன் கூடுதலாக 10 நாட்கள் என 25 நாட்கள் கேட்டாராம்.
முதலில் மறுத்த ரஜினி பின் சம்மதித்துவிட்டாராம். ஆனால் ஒரு நிபந்தனையும் வைத்துள்ளார். 25 நாட்கள் மட்டுமே தான் படப்பிடிப்புக்கு வருவதாகவும் அதன் பின் ஒரு நாள் கூட தான் கால் ஷீட் கொடுக்க மாட்டேன் எனவும் கூறிவிட்டாராம்.
ஆனால் எஸ்.பி.முத்துராமனோ 23 நாட்களில் படத்தினை முடித்துவிட்டு அந்த 2 நாட்களை ரஜினியிடமே கொடுத்துவிட்டாராம். அப்படி ரஜினி கிராக்கி செய்து நடித்த திரைப்படம்தான் ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியான குரு சிஷ்யன் திரைப்படம். பல நிபந்தனைகள் போட்டு ரஜினி இப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தேடி தந்தது என்றே கூறவேண்டும்.
என்னை வாழவைக்கும் தெய்வங்கள்…. தமிழ் ரசிகர்களை உயர்த்திய ரஜினி…. கர்நாடகாவில் தரமான செயல்….!!