இளையராஜாவின் போட்ட டியூனை விரும்பாத ரஜினி.. வீரா படத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு!

By John A

Published:

ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா என வரலாற்று ஹிட் கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான மற்றொரு படம் தான் வீரா. 1994-ல் வெளியான இந்த படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் கதையானது தெலுங்கில் வெளியான அல்லரி முகுடு என்ற படத்தின் ரீமேக் ஆகும். காதல், காமெடி, செண்டிமெண்ட் என வழக்கமான ரஜினி படமாக வந்து சூப்பர் ஹிட் ஆனது வீரா. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கே சூப்பர்ஹிட் ஆனது. இருப்பினும் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களின் டியூனை கேட்ட ரஜினிக்கு அதில் திருப்தி இல்லையாம். வீரா படத்தில் இடம் பெறும் முதல் பாடலான ‘கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட..’ என்ற பாடலுக்கு இளையராஜா மென்மையான மெலடி டியூனை போட்டுக் கொடுத்திருக்கிறார். இதனைக் கேட்ட ரஜினி திருப்தி இல்லாமல் இருந்திருக்கிறார்.

நடிகர் திலகத்துக்கு ஆல் டைம் ஹிட் கொடுத்த பொன்மகள் வந்தாள் பாடல்… இந்த பாட்டை எழுதியது யார் தெரியுமா?

ஏனெனில் தெலுங்கு படத்தில் வரும் பாடல் மிக மாஸாக இருக்குமாம். அதற்கேற்ற காட்சியமைப்புக்கு தமிழில் மிக மெலோடியாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். மேலும் இந்த பாடல் இரு நடிகர்கள் போட்டி போட்டு பாடுவது போல் அமைந்திருக்குமாம். அந்த பாடலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. எனவே அதே போல் பாடல் அமைந்தால் நன்றாக இருக்கும் என ரஜினி விரும்ப இந்த செய்தி தயாரிப்பளார் பஞ்சு அருணாச்சலத்திற்கு போனது.

உடனே பஞ்சு அருணாச்சலம் ரஜினியைச் சந்தித்து இதே போன்று இருக்கட்டும். ஷூட்டிங் போவோம். நன்றாக இல்லை எனில் மாற்றிக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். மேலும் தெலுங்கு வீராவான அல்லரி முகுடுவில் ஒரு அதிர வைக்கும் பாடலும் இருக்கும். அதே போல் இன்னொரு பாடலும் ரஜினி கேட்க பிறந்தது தான் ‘மலைக்கோயில் வாசலில்..’. இவ்விரு பாடல்களையும் இசைஞானி இளையராஜா பதிவு செய்து ரஜினிக்கு போட்டுக் காட்ட ரஜினி அசந்து போயிருக்கிறார். பின்னர் தயாரிப்பளார் பஞ்சு அருணாச்சலத்திடம் இதுவே இருக்கட்டும் என்று கூறியிருக்கிறார்.