கேட்கும் போதே ஆட்டம் போட வைக்கும் MGR, சிவாஜியின் மாஸ் ஹிட் பாடல்கள்.. இதெல்லாம் எழுதியது இவரா?

தமிழ் சினிமாவில் பழைய காலத்து பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி என பல புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் புலமையால் தமிழசினிமாவிற்கு ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் பல அற்புத பாடல்களைக் கொடுத்தனர். இவர்களுக்கு மத்தியில் தனி பாடலாசிரியராக தனி ராஜ்ஜியம் நடத்தியவர்தான் ஆலங்குடி சோமு.

சிவங்ககை மாவட்டம் ஆலங்குடியில் பிறந்த சோமு 1960 முதல் 1997 வரை தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் புரட்சிப் பாடல்கள், நல்ல கருத்துக்களை கொண்ட பாடல்களை இயற்றி வெற்றியைக் கொடுத்துள்ளார். இவர் பாடலாசிரியராக அறிமுகமான முதல் படம் யானைப்பாகன் திரைப்படத்தில் ‘ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்..’ என்ற பாடல் ஆகும்.

தொடர்ந்து கொங்குநாட்டு தங்கம், கலையரசி, காஞ்சி தலைவன் போன்ற படங்களில் பாடல்கள் எழுதி கவனம் ஈர்த்தார். எம்ஜிஆருக்காக ‘தொழிலாளி படத்தில் இடம்பெற்ற ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி..’ என்ற பாடலை இயற்றினார் சோமு. இந்தப் பாடல் மிகுந்த வரப்பேற்பைப் பெற தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் பிரபல படலாசிரியரானார். 1965-ல் மட்டும் சுமார் 10 படங்களுக்கு பாடல்கள் எழுதினார். அதில் எங்க வீட்டுப் பிள்ளை, இரவும் பகலும், நீர் குமிழி போன்ற ஹிட் படங்கள் அடக்கம்.

தந்தையைப் போலவே ஹிட் பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.பல்லவி.. ஜொலிக்காமல் போன வாரிசு!

குறிப்பாக ‘இரவும் பகலும்’ படத்தில் ‘இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்..’ என்ற பாடல் இன்றுவரை ஹிட் பாடலாக ஒலிக்கிறது. மேலும் ‘குடியிருந்த கோவில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலும் கேட்டேன்..’ என்ற பாடலை இன்று கேட்டால் கூட எழுந்து ஆட வைக்கும் பாடலுக்கு சொந்தக்காரரும் ஆலங்குடி சோமுதான். இதே படத்தில் இடம்பெற்ற ‘துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை..’ பாடலும் இவர் வரிகளே. மேலும் ‘தாயில்லாமல் நான் இல்லை..’ போன்ற பாடலும்  குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘சொர்க்கம்’ படத்தில் வரும் ‘பொன்மகள் வந்தாள்.. பொருள் கோடி தந்தாள்..’ பாடல் ஆல் டைம் ஃபேவரைட் ஆக விளங்குகிறது. இப்படி 35 ஆண்டுகளில் சுமார் 170 பாடல்களை எழுதியிருக்கிறார் சோமு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews