நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் தற்பொழுதும் தவிர்க்க முடியாத மூத்த நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். இந்த இரண்டு ஹீரோக்களின் படங்களை கொண்டாட தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அதாவது 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு தான் முதல் முதலில் ரஜினி மற்றும் கமலின் படங்கள் ஒன்றாக வெளிவந்தது.

கமல் நடித்த படம் தூங்காதே தம்பி தூங்காதே அதே நாளில் வெளியான ரஜினி நடித்த படம் தங்க மகன். இதில் தூங்காதே தம்பி தூங்காதே 175 நாட்கள் ஓடி ஒரு மாபெரும் வெற்றி படம். தங்க மகன் 100 நாட்கள் மட்டுமே ஓடிய ஒரு சுமாரான வெற்றி படம். இந்த ஆண்டில் இருந்து தான் ரஜினி மற்றும் கமலின் படங்கள் பண்டிகை நாட்களில் மோதத் துவங்கியது.

அடுத்ததாக 1984ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த்க்கு நல்லவனுக்கு நல்லவன் படம் கமலுக்கு எனக்குள் ஒருவன் படமும் ரிலீஸ் ஆனது. இந்த முறை ரிசல்ட் ரஜினிக்கு சாதகமாக வந்தது. நல்லவனுக்கு நல்லவன் சுமார் 150 நாட்கள் ஓடி ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. கமலின் எனக்குள் ஒருவன் படம் 100 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது.

அடுத்ததாக 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று கமல் நடித்த காக்கிச்சட்டை ரஜினி நடித்த நான் சிவப்பு மனிதன் என இரண்டு படங்கள் மோதியது. இதில் கமலின் காக்கிச்சட்டை படம் பட்டைய கிளப்பி 150 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. ரஜினியின் நான் சிகப்பு மனிதன் 100 நாட்கள் ஓடி வெற்றி முத்திரையை பதித்தது.

அடுத்ததாக 1986ல் தீபாவளிக்கு மறுபடியும் ரஜினி மற்றும் கமல் மோதுகிறார்கள். இந்த தடவை ரஜினிக்கு படிக்காதவன் படமும் கமலுக்கு ஜப்பானில் கல்யாணராமன் படமும் ரிலீஸ் ஆனது. இந்த போட்டியில் பெற்றது ரஜினியின் படிக்காதவன் படம், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 235 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

அடுத்ததாக 1987ல் தீபாவளிக்கு ரஜினி மற்றும் கமல் மறுபடியும் போட்டி போடுகிறார்கள். இந்த தீபாவளிக்கு ரஜினிக்கு அவரின் சொந்த தயாரிப்பான மாவீரன் கமலுக்கு குருநாதர் பாலச்சந்தர் தயாரிப்பில் புன்னகை மன்னன். இதில் மாவீரன் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் படம் பிளாப் ஆனது. கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் 175 நாட்கள் ஓடி வெற்றி பெறுகிறது.

அடுத்ததாக ஒரு வருட இடைவெளிக்கு பிறகு 1989 ஆம் ஆண்டு மீண்டும் நேருக்கு நேர் போட்டி நடைபெற்றது. இந்த தீபாவளிக்கு கமலுக்கு வெற்றிவிழா என்னும் ஒரு ஸ்பை திரில்லர் படமும், ரஜினிக்கு மாப்பிள்ளை என்னும் தெலுங்கு ரீமேக் படமும் வெளியாகிறது. இந்த தீபாவளி போட்டியில் ரஜினியின் மாப்பிள்ளை தான் வெற்றி பெற்றது.இந்த படம் 200 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.

அடுத்த போட்டி 1990 ஆண்டு பொங்கலில் ரஜினிக்கு பணக்காரன் திரைப்படமும் கமலுக்கு இந்திரன் சந்திரன் படம் வெளியானது. இதில் ரஜினியின் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அடுத்ததாக 1991 ஆண்டு தீபாவளிக்கு ரஜினி, மம்முட்டி, மணிரத்தினம் இணைந்து தளபதி படமும் கமலுக்கு குணா மிகப்பெரிய படங்கள் வந்தது. ஆனால் இந்த தீபாவளி போட்டியில் வென்றது ரஜினியின் தளபதி, இந்த படம் 150 நாட்களுக்கும் மேல் ஓடியது. கமலின் குணா திரைப்படத்தை இன்று பாராட்டினாலும் இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில் மக்கள் ஏற்கவில்லை.

அடுத்ததாக 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கமலுக்கு தேவர் மகன் ரஜினிகாந்த்திற்கு பாண்டியன். கமலின் தேவர் மகன் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கொண்டாடி வசூல் சாதனை செய்தது. ரஜினிக்கு பாண்டியன் படம் வழக்கமான ஒரு மசாலா படமாக வெளிவந்து பகல் காட்சி மட்டும் 100 நாட்கள் ஓடி ஒரு சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

இதற்கு அப்புறம் ரஜினி, கமல் நேரடி போட்டி ஒரு மூன்று வருடத்திற்கு இல்லை. ஆனால் 1995 பொங்கலுக்கு மறுபடியும் ரஜினி மற்றும் கமல் நேருக்கு நேர் போட்டி போட்டார்கள். ரஜினியின் பாட்ஷா, கமலின் சதிலீலாவதி படம் ரிலீஸ் ஆனது. அதில் ரஜினியின் பாட்ஷா பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.

கடைசி நேரத்திலும் கமலின் மகளுக்காக எம்ஜிஆர் கொடுத்த அன்பு பரிசு என்ன தெரியுமா?

அதே 1995 தீபாவளிக்கு ரஜினியின் கமல் மறுபடியும் போட்டி போட்டுள்ளனர். இந்த தீபாவளிக்கு ரஜினிக்கு முத்து, கமல் மற்றும் அர்ஜுன் சேர்ந்து நடித்த குருதிப்புனல். இதில் முத்து ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் 150 நாட்கள் ஓடி ஒரு பெரிய ஹிட்டான ஒரு படம். கமலின் குருதிப்புனல் வசூல் ரீதியாக பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை.

அதற்குப் பிறகு பத்து வருடம் கழித்து 2005 தமிழ் புத்தாண்டு அன்று மறுபடியும் போட்டி தொடங்கியது. அதில் ரஜினிக்கு சந்திரமுகி, கமலுக்கு மும்பை எக்ஸ்பிரஸ். ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் சென்னையில் 784 நாட்கள் சுமார் மூன்று வருடம் ஓடி சாதனை படைத்தது. கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படம் படுதோல்வி அடைந்தது.