ராகவா லாரன்ஸ் தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பாராயனிடம் கிளீனராக வேலை செய்தார். ராகவா லாரன்ஸ் அவர்களின் நடன திறமையை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் நடன கலைஞர்கள் சங்கத்தில் சேர உதவினார்.
தமிழ் சினிமாவில் பின்னணி நடன கலைஞராக தனது பணியை தொடங்கினார் ராகவா லாரன்ஸ். ஜென்டில் மேன் (1993), முட்டா மேஸ்திரி (1993) போன்ற திரைப்படங்களில் பின்னணி நடன கலைஞராக தோன்றினார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்த ‘உன்னை கொடு என்னைத் தருவேன்’, பிரஷாந்த் நடித்த ‘பார்த்தேன் ரசித்தேன்’ ஆகிய திரைப்படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார் ராகவா லாரன்ஸ்.
2002 ஆம் ஆண்டு ‘அற்புதம்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து ‘ஸ்டைல்’, ‘டான்’ போன்ற படங்களை இயக்கி நடித்தார். இருப்பினும் 2007 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ஹாரர் திரைப்படமான ‘முனி’ வெற்றிப் பெற்று தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பின்னர் முனி ‘பாகம் 2 – காஞ்சனா’, ‘காஞ்சனா 2′, காஞ்சனா 3’ என்ற தொடர் திரைப்படங்களை இயக்கி நடித்தார். இவை பெரும்பாலும் நல்ல விமர்சங்களையே பெற்றது. சினிமாவை விட தொண்டு நிறுவனம் ஆரம்பித்து இயலாதோர்க்கு உதவி செய்து வருவதன் மூலம் பேரும் புகழும் மக்கள் மனதில் இடத்தையும் பிடித்தார் ராகவா லாரன்ஸ்.
தற்போது ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது மகளைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், எனது மகள் அமைதியான குணம் படைத்தவர், தீவிர சிவ பக்தை. சமீபத்தில எனது மகளின் பிறந்தநாள் வந்தது. அவளிடம் உனக்கு என்னடா வேணும், எங்கயாவது போலாமா அப்டினு கேட்டேன், அவ என்னை காசிக்கு கூட்டிட்டு போங்க டாடி அப்டினு சொன்னா. அதை கேட்டுட்டு என் அம்மா என்னை திட்டினாங்க, உன்னால தான்டா அவ இப்படி இருக்கா அப்படினு சொன்னாங்க என்று மகளைப் பற்றி பகிர்ந்துள்ளார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.