புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.. அல்லு அர்ஜுன் தான் காரணமா?

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட நெரிசல் தான்…

Pushpa-2

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்ததால் ஏற்பட்ட நெரிசல் தான் அந்த பெண்ணின் உயிர் இழப்புக்கு காரணம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் ஹைதராபாத்தில் இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள முன்னணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்தார்.

அப்போது அவரை பார்க்க முண்டியடித்துக் கொண்டு கூட்டம் சென்றபோது கூட்டத்தினர் சிலர் படம் பார்க்க வந்த இளம் பெண்ணை தள்ளிவிட்டதாக தெரிகிறது. இந்த நெரிசலில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல் கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரேவதி என்றும் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த நேரத்தில் தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அவருடைய மகனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரிய நடிகர்கள் தங்கள் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக தியேட்டருக்கு வரும்போதுதான் இந்த அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது என்றும் இதனை அடுத்து இதுபோன்று வருகை தருவதை பெரிய நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

மரணம் அடைந்த அந்த பெண்ணின் உயிருக்கு அல்லு அர்ஜுன் தான் பொறுப்பு என சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.