புஷ்பா 2 படம் இன்று வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து படத்தை வரவேற்றுள்ளனர். பலதரப்பில் இருந்தும் பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்படி ஒரு படமா? அதுவும் மூன்றரை மணிநேரம் ஓடுற படத்துல கொஞ்சம்கூட டல்லே அடிக்கலையேங்கறாங்க. அதுக்குக் காரணம் விறுவிறுப்பான திரைக்கதை தான்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடிக்க சுகுமார் பண்ட்ரெட்டி படத்தை இயக்கியுள்ளார். படத்தைப் பற்றி புகழ்ந்து தள்ளிய பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் படத்தின் சில மைனஸ்களையும் தவறாமல் குறிப்பிட்டுள்ளார் என்னன்னு பாருங்க.
பகத்பாசில் பெரிய மீசை, மொட்டைத்தலைன்னு வர்றாரு. ஆனா பாடி ஒத்துழைக்கல. படத்துல லாஜிக்கா கடைசி வரை நல்ல கொண்டு போயிருக்காரு இயக்குனர். புஷ்பா 1ல ‘ஸ்ரீவள்ளி’ சாங் எல்லாம் இப்போ கேட்டாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு பெரிய மெலடி.
சமந்தா
முதல் பார்ட்ல பாடல்கள் எல்லாம் செமயாக இருந்தது. அந்தப் படம் வந்தப்போ சமந்தாவுக்கு ஒரு பாட்டுக்கு 5 கோடி. கல்யாண வீட்டுக்கு சமந்தா போய் ஆடுவாராம். அந்தப் படத்துல சமந்தா சம்பளம் கம்மி. ஆனா இந்த ஒரு பாட்டை வச்சே அவங்க சம்பாதிச்சது பல கோடிகள். அப்படிப்பட்ட பாட்டு இந்தப் படத்துல இல்லை. அது ஒரு பெரிய ஏமாற்றம்தான்.
2வது பார்ட்ல சாங்
புஷ்பா 2ல பேக்ரவுண்டு மியூசிக் சாம் சிஎஸ் ரொம்ப அல்டிமேட்டா பண்ணிருக்காரு. டிஎஸ்பி பண்ணிருந்தா கூட இந்தளவுக்குப் பண்ணிருப்பாரான்னு தெரியல. அவருக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்துருக்காங்க. அவங்க கேட்க கேட்கக் கொடுத்துருக்காங்க. முதல் பார்ட் மாதிரி 2வது பார்ட்ல சாங் ஈர்க்கலன்னா அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.
டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர்
அல்லு அர்ஜூனுக்கு டப்பிங் கொடுத்தது டப்பிங் ஆர்டிஸ்ட் சேகர். அவரு குரல் மாதிரியே இருந்தது. ஸ்லாங்கும் அப்படியே இருந்தது. கேட்குறவங்க, பார்க்குறவங்க எல்லாரும் பாராட்டுறாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜூன் அவரைப் பார்ப்பதாக சொல்லி இருந்தாராம். அந்த ஸ்லாங் பேசுறது ரொம்ப கஷ்டம். அதைப் பாராட்டியே ஆகணும். பல காட்சிகள்ல கூட்டம் கூட்டமாக காட்டுறாங்க. ஆனா அது நமக்கு எரிச்சல் ஊட்டல. முக்கியமாக பாடல் காட்சியில் நம்மை எங்கேயும் உருத்தல.
எக்ஸ்ட்ராபிட்டிங்க்ஸ்
அல்லு அர்ஜூன் அவ்வளவு பர்பக்டா பண்ணிருக்காரு. பார்ட் 3க்கான தேவை இல்லை. இந்தப்படத்துலயே அவங்க முடிச்சிருக்கலாம். ஒரு முக்கால் மணி நேர படத்தைத் தூக்கிட்டு ஒரு போட்டோ எடுக்குறது தான் பிரச்சனை. சிஎம்மை மாத்திட்டாரு. எப்படி வந்து புது சிம்மை மாத்துனாரு? அவரு இவருக்கு விசுவாசமா இருக்காரான்னு கதையை முடிச்சிருந்தாங்கன்னா சூப்பரான படமா இருக்கும். அதைத்தாண்டி இவங்க போட்ட எக்ஸ்ட்ராபிட்டிங்க்ஸ் தான் நமக்கு எரிச்சலை வரவழைக்குது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.