பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்.. ஒரே பட தோல்வியால் தற்கொலை.. மணிரத்னம் சகோதரர் ஜிவி..!

By Bala Siva

Published:

ஜி வெங்கடேஸ்வரன் என்ற ஜிவி, ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்றும் ஆனால் ஒருசில படங்களினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது

இயக்குனர் மணிரத்னம் சகோதரரான ஜிவி வெங்கடேஸ்வரன் சார்ட்டட் அக்கவுண்ட் படித்தவர். அவர் ஜிவி பிலிம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தார். முதன்முதலில் அவர் தயாரித்தது மணிரத்னம் இயக்கத்தில் உருவான மௌன ராகம். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான அக்னி நட்சத்திரம், குரு ஆகிய படங்களை தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு விசு இயக்கத்தில் உருவான வேடிக்கை என் வாடிக்கை என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தை பெற்றது.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

இதனை அடுத்து தான் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அஞ்சலி என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகி, ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்வதற்கு காரணமாக இருந்தது.

ஜிவி பிலிம் தயாரிப்பில் உருவான திரைப்படத்தில் ஒன்றுதான் ரஜினிகாந்த் நடித்த தளபதி. இந்த படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் காரணமாக இந்த படத்தில் பெரிய அளவில் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே, மன்னன் திரைப்படம் வெளியானதால் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இதனை அடுத்து விசு இயக்கத்தில் உருவான நீங்க நல்லா இருக்கணும் என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் மதுவினால் ஏற்படும் தீமைகளை குறித்த கதை அம்சம் கொண்டது. இந்த படத்தில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து மே மாதம், இந்திரா, தமிழன், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க போன்ற படங்களை தயாரித்தார். இதில் தமிழன் திரைப்படம் விஜய் நடித்தது. இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவை அறிமுகம் செய்தார். ஆனால் மேற்கண்ட எந்த படமும் வசூல் ரீதியாக ஜிவிக்கு கை கொடுக்கவில்லை.

கேலி கிண்டல் முதல் டாக்டர் பட்டம் வரை.. நடிகர் கிங்காங் தன்னம்பிக்கை வாழ்க்கை..!

இந்த நிலையில் தான் விஜயகாந்த் நடிப்பில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவான சொக்கத்தங்கம் என்ற படத்தை ஜிவி தயாரித்தார். இந்த படம் வெற்றி பெற்றால் அவர் மீண்டு வர முடியும், இல்லையென்றால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஆகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தின் திரைக்கதை அம்சம் நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த விஷயம் இந்த படத்தில் இல்லை.

சொக்கத்தங்கம் படத்திற்காக வாங்கிய கடனுக்காக தான் அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரை வைத்து கடன் கொடுத்தவர் மிரட்டியதாகவும் இதனால் ஏற்பட்ட அவமானம் காரணமாக ஜிவி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.

ஜிவி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பு நிறுவனம். அது மட்டும் இன்றி மிகச் சிறப்பாக வருமானவரி காட்டியவர் ஜிவி என்ற பெருமையும் அவருக்கு வருமானவரித்துறையால் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பெருமை எதுவும் அவரது உயிரை காப்பாற்றவில்லை.

ஜிவி மறைவிற்கு பின்னர் ஏற்கனவே தயாரிப்பில் இருந்த உள்ளம் கேட்குமே, கைவந்த கலை, உற்சாகம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் வெளியானாலும் எந்த படமும் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை.

கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!

ஜிவி தற்கொலை தமிழ் சினிமாவை அதிர வைத்தது, ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக ஜிவி இருந்தார். அவர் நினைத்திருந்தால் தனக்கு நெருக்கமானவர்களிடம் பணம் வாங்கி கடனை கட்டி இருக்கலாம், அவருக்கு உதவவும் கண்டிப்பாக பெரிய நடிகர்கள் முன்வந்திருப்பார்கள். ஆனால் யாரிடமும் அவர் கடன் கேட்க விருப்பம் இல்லாமல், திடீரென தற்கொலை முடிவு எடுத்தது தான் தமிழ் சினிமாவுக்கு பெரும் சோகமாக அமைந்தது.

Tags: ஜிவி