பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் மூவீஸ் பாலாஜி பிரபு சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் யாருன்னா ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார்னு பெயர் வரக் காரணமான பைரவி படத்தை இயக்கிய எம்.பாஸ்கரின் மகன். அப்பேர்ப்பட்டவருக்கு என்ன வருத்தம்னு பார்க்கலாமா…
நிகழ்ச்சியில் ஆங்கர் கேட்ட கேள்வி இதுதான். ரஜினி நடித்த பைரவி படத்தை இயக்கியவர் உங்களது தந்தை எம்.பாஸ்கர். அப்படி இருக்க அவரோட பேரு அந்த அளவு பிரபலமாகலையே என்ன காரணம்னு கேட்டதுக்கு அது திட்டம்போட்ட சதி.
ஒரு இருட்டடிப்புன்னு சொன்னார். படத்தோட வெற்றி விழாவில் கூட தந்தையின் பெயர் பயன்படுத்தாதது வருத்தம் தான் என்றார். அதன்பிறகு தந்தையின் மறைவுக்காவது ரஜினி சார் வந்தாரான்னு கேட்டார்.
அதற்கு பாலாஜி பிரபு சொன்ன பதில் தான் இது.
கொஞ்சம் டைரக்டர்ஸ் வந்தாங்க. நடிகர்ல சிவக்குமார் மட்டும் வந்தாரு. வேற யாரும் வரல. நடிகைகளும் வரல. ரஜினி சார் வருவாருங்கற எண்ணம் ஒரு மூலைல இருந்துச்சு. ஆனா அவரும் வரல. அப்படி சொன்னதும் ஆங்கர் அந்த நேரம் உங்களோட மனநிலை எப்படி இருந்தது?
எல்லாரும் கைவிட்டுட்டாங்களோன்னு நினைச்சீங்களான்னு கேட்டாரு. கைவிடுறதுலாம் ஒண்ணும் இல்ல. முதல்ல யாரும் கைகொடுக்க மாட்டாங்க. ரஜினி சார் முதல்ல கை கொடுக்கும் கைன்னு ஒரு தயாரிப்பாளருக்கு ஜெயிச்சிக் கொடுத்தாரு. முதன் முதலா சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன டைரக்டரோட பேரையே வெளியில சொல்ல முடியல.
அப்பாவோட டெத்துக்கும் வரல. போன் பண்ணல. மேனேஜரை விட்டு இரங்கல் தெரிவிச்சி குறிப்பு அனுப்பிருக்கலாம். மலர் வளையம் அனுப்பிருக்கலாம். எதுவுமே பண்ணல. அப்பா இறந்தது ஜூலை 12, 2013. அடுத்த நாள் பிரபல நடிகை இறந்தாங்க. பேரு சொல்ல விரும்பல. அங்க ரஜினி வர்றாரு.
முதல் ஆளா மலர்வளையத்தோடு போறாரு. இதுல என்ன தெரியுதுன்னா ஒரு நடிகைக்கு இருக்குற மரியாதையை விட சூப்பர்ஸ்டாரா அறிமுகப்படுத்துன இயக்குனருக்கு இல்ல. இது உண்மை. அவங்க வந்துருவாரு. இவங்க வந்துருவாருன்னு எல்லாம் நாம பார்க்க முடியாது.
தங்கத்தட்டுல சாப்பிட்ட தியாகராஜ பாகவதர் ஜிஎச்ல இறந்து போனாரு. அவரே அனாதை பிணமாகத் தான் போனாரு. யாருமே வரல. இது தான் சினிமாவுல நடக்கும். அதனால ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.