விதார்த் நடிப்பில் சில வருடம் முன் ரிலீஸ் ஆன படம் ஒரு கிடாயின் கருணை மனு.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் நல்லதொரு விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பெரிய ரீச் கிடைக்கவில்லை. இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா .
இவர் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு பிரேம்ஜி அமரனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
காவல் நிலையத்தில் நடக்கும் காமெடிகளை வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
இதில் பிரேம்ஜி அமரன் உடன் ஸ்வயம் சித்தா, பிக்பாஸ் புகழ் ரேஷ்மா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.