வெங்கட் பிரபு பக்கத்தில் இருந்த பிரேம்ஜி டீ ஷர்ட்டில் இருந்த வாசகம்.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா..

Published:

இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2, ராயன், தங்கலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து மிகப்பெரிய திரைப்படங்களும் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் திரைப்படம் தான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’.

முதல் முறையாக வெங்கட் – பிரபு விஜய் கூட்டணி கோட் திரைப்படத்தின் மூலம் அமைந்துள்ள சூழலில், யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

விஜய் படங்கள் குறித்த அறிவிப்பு வந்தாலே அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி விடும். கோட் திரைப்படமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்த அதே வேளையில் பாடல்கள் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தது. ஆனால் ட்ரைலரில் பின்னணி இசை அதிகம் கவனம் பெற்றதால் யுவன் சங்கர் ராஜா நிச்சயம் திரைப்படத்திலும் தன் மீதான விமர்சனத்தை உடைத்தெறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது

அப்பா, மகன் என விஜய்யின் இரட்டை கதாபாத்திரம் படத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அவரது பதின்ம பருவமும் இந்த படத்தில் Deaging கில் வருவது ரசிகர்கள் மத்தியில் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது. இன்னும் சரியாக ஒரு வாரமே இருக்கும் சூழலில் கோட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பட குழுவினர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, அவரது சகோதரரும் நடிகருமான பிரேம்ஜி அமரன், தயாரிப்பாளர் என அனைவருமே கலந்து கொண்டனர். அந்த சமயத்தில், வெங்கட் பிரபுவுக்கு அருகே அமர்ந்திருந்த பிரேம்ஜியின் டீ ஷர்ட்டில் இருந்த வாசகம் ஒன்று தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.

சமீபத்தில் கோட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் திரைப்படம் குறித்து நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் பிரேம்ஜி அமரன், “Im With Stupid” என்ற வாசகம் இடம்பெற்ற டீ ஷர்ட்டை அணிந்திருந்தார். மேலும் அதன் கீழ் ஆட்காட்டி விரல் அவருக்கு இடது பக்கம் இருக்கும் நபரை காட்ட, அங்கே வெங்கட் பிரபு இருந்தார்.

இந்த வீடியோ தற்போது அதிக கவனம் பெற, பிரேம்ஜி அமரன் வெங்கட் பிரபுவை குறிப்பிடதாகவும், இந்த டீ ஷர்ட் அணிந்தால் அவருக்கு இடது பக்கம் யாரும் இருக்கவே விரும்ப மாட்டார்கள் என்றும் வேடிக்கையாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

மேலும் உங்களுக்காக...