வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!

Published:

பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் பிரகாஷ்ராஜை திருமணம் செய்து கொண்ட பழம்பெரும் நடிகர் சிஎல் ஆனந்தனின் மகள் லலிதா குமாரி சில வருடங்களில் கணவரை விட்டு பிரிந்தாலும் அவர் விவாகரத்துக்கு பின்னும் தைரியமான முடிவு எடுத்து தனது குழந்தைகளை நல்ல நிலையில் வளர்த்துள்ளார். அவருடைய வாழ்க்கையை தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

பழம்பெரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சி.எல்.ஆனந்தன் அவர்களை ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடலில் பார்த்திருப்பீர்கள். இந்த பாடலை இன்று வரை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த பாடலில் நடித்தவர்தான் சி.எல். ஆனந்தன்.

85 ரூபாயுடன் சென்னை வருகை.. இளையராஜா வீட்டில் எடுபிடி.. பிரபல இசையமைப்பாளரின் வெற்றிக்கதை..!

lalitha kumari3 1

ஸ்டண்ட் காட்சிகளில் அவர் டூப் இன்றி நடிப்பார். அவரது படங்கள் சில சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. சிஎல் ஆனந்தன் அவர்களின் மகள்கள்தான் டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதா குமாரி.

டிஸ்கோ சாந்தி பல திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், லலிதா குமாரி காமெடி மற்றும் குணசித்திர நடிகையாக மாறினார். கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தில் சுகாசினியின் வேலைக்காரியாக அறிமுகமான அவர், அந்த படத்திலேயே காமெடியில் கலக்கி இருப்பார்.

தன்னுடைய வீட்டில் திருட வந்த திருடனை பிடித்து அதன் பிறகு அந்த திருடன் திருந்தி படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து அவரையே திருமணம் செய்து கொள்ளும் ஒரு கேரக்டரில் இந்த படத்தில் நடித்திருப்பார்.

lalitha kumari2

அதன்பின் விசுவின் ‘வீடு மனைவி மக்கள்’, கே.பாலச்சந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். அனைத்து திரைப்படங்களிலும் அவர் காமெடி வேடத்தில் கலக்கினார். அவருடைய நடிப்புக்கு என தனி  ரசிகர்கள் இருந்தனர்.

தமிழ் திரை உலகில் பாடகிகளாக மாறிய நடிகைகள் யார் யார் தெரியுமா?

இந்த நிலையில் கே.பாலசந்தர் இயக்கிய டூயட் என்ற திரைப்படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கும் லலிதா குமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் ஆறே மாதங்களில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இவர்களில் மகன் திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பிரகாஷ்ராஜுக்கும், பாலிவுட் பிரபலம் ஒருவருடன் காதல் ஏற்பட்டதை அடுத்து அவர் லலிதா குமாரியை அவர்  விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அப்போது இருவரும் உட்கார்ந்து விவாகரத்து குறித்து அமைதியாக பேசியதாகவும் எதனால் பிரிய வேண்டும்? பிரிவுக்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தீர்க்கமான முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

lalitha kumari

விவாகரத்து பெற்று பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் பழி சொல் கூறக்கூடாது என்றும் பத்திரிகைகளில் எந்தவித சர்ச்சையான செய்தியும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். மேலும் தங்களுடைய பிரிவு தங்களுடைய மகள்களுக்கு எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் கணவன் மனைவியாக பிரிந்தாலும் மகள்களுக்கு அப்பா அம்மாவாக இருவருமே சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். அதற்கு பிரகாஷ்ராஜூம் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு பிரகாஷ்ராஜ், அவர் காதலித்த போனி வர்மா என்ற பாலிவுட் பிரபலத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் லலிதாகுமாரி தனது மகள்களை வளர்ப்பதிலேயே தனது காலத்தைக் கழித்தார்.

lalitha kumari1

இந்த நிலையில்தான் தறி என்ற சீரியலை அவர் தயாரித்தார். அந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பெங்களூரு தொகுதியில் பிரகாஷ்ராஜ் தேர்தலில் போட்டியிட்ட போது தனது மகளை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல லலிதகுமாரி அனுமதித்தார்.

தமிழில் 13 படங்கள்.. அரசியலில் டெபாசிட் இழப்பு.. நடிகை நக்மாவின் அறியப்படாத தகவல்..!

லலிதா குமாரியின் திருமண வாழ்க்கை சிறப்பாக இல்லாவிட்டாலும் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஜெயித்தவர். அதேபோல் தனது மகள்கள் இருவரையும் தனி ஒருவராக வளர்த்து இருவரையும் தற்போது நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...