பாப் கிங் என்று அழைக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் 20-ம் நூற்றாண்டின் முக்கிய நபர்களுள் ஒன்றாக கருதப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் உதடுகளை உச்சரிக்காதவர் இந்த உலகில் இல்லவே இல்லை எனலாம். நாம் சும்மா நடனம் ஆடினாலோ, பாடினாலோ இவர் பெரிய மைக்கேல் ஜாக்சன் என்று அவரை ஒவ்வொரு தருணத்திலும் நினைவு கூர்கிறோம்.
அவரின் மூன்வாக் நடனத்திற்கு அடிமையாகத நடன ரசிகர்களே இல்லை எனலாம். இனவெறிக்கு எதிரான பாடல்களைப் பாடி புகழின் உச்சிக்கே சென்று இன வெறி தடைகளை உடைத்தார். இன்றும் அவரது ஆல்பங்கள் உலக அளவில் விற்பனையில் சக்கைப் போடு போடுகிறது. புகழின் உச்சியில் இருந்த மைக்கேல் ஜாக்சன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தால் கைது செய்யப்பட்டு இருளைச் சந்தித்தார். பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமையால் மீண்டும் விடுதலை ஆனார்.
அவார்டு குவியல்களும், எண்ணிலடங்கா பணமும் சேர மைக்கேல் ஜாக்சன் உலக இசைகலைஞர்களில் அதிகம் சம்பாதிக்கும் நபராகத் திகழ்ந்தார். உலகம் முழுவதும் உள்ள நடனக் கலைஞர்களுக்கு மைக்கேல் ஜாக்சன் ரோல்மாடலாகத் திகழ்கிறார் என்றால் அவரின் நடனம் மற்றும் பாப் இசை முக்கியத்துவத்தை அறியலாம்.
தனது கருப்பு நிறத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெள்ளையாக மாறினார். ஆனால் இதுவே அவரது வாழ்க்கைக்கு பிரச்சினையாக அமைந்து விட்டது. தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகள், மதுப்பழக்கம் போன்றவற்றால் கடந்த 2009-ல் உயிரிழந்தார் மைக்கேல் ஜாக்சன்.
ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவி
இந்நிலையில் இவர் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட் தற்போது ஏலம் விடப்பட்டது. பெப்சி விளம்பரத்திற்காக அவர் அணிந்து நடித்த கருப்பு வெள்ளை நிறத்தால் ஆன அந்த லெதர் ஜாக்கெட் இந்திய மதிப்பில் சுமார் 2.55 கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவர் பயன்படுத்திய மற்ற பொருட்களும் பெரிய தொகையில் ஏலம் போனது.
இந்த அளவிற்கு இவர் ஜாக்கெட் மட்டுமே ஏலம் போனது என்றால் அவரின் புகழை நாம் கணித்து விடலாம். உலகெங்கிலும் பெண் ரசிகர்களை மிக அதிகமாக இருந்த ஒரே பிரபலம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் மட்டுமே.