ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதி : வெளியான அசத்தல் அப்டேட்

By John A

Published:

குறும்படங்களில் நடித்து தென்மேற்குப் பருவக் காற்று மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார் விஜய் சேதுபதி. எம்.ஜி.ஆர். –  சிவாஜி, ரஜினி – கமல், அஜீத் – விஜய், சிம்பு – தனுஷ், சூர்யா – விக்ரம் ஆகியோர் வரிசையில் சிவகார்த்திகேயன்  – விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் அவருக்கு இடம் கொடுத்துள்ளனர்.

கதாயநாயகன், வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமானாலும் தனது இமேஜை உடைத்து நடித்து இயக்குநர்களின் நாயகனாகத் திகழ்கிறார் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் கால்பதித்து அங்குள்ள ஹீரோக்களை ஓரங்கட்டுகிறார் விஜய்சேதுபதி.

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இவர் நடித்த ஜவான் படம் 1000 கோடி வசூல் கிளப்பில் இணைய தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து அழைப்புகள் குவிந்தது விஜய் சேதுபதிக்கு. அந்த வகையில் தற்போது பாலிவுட் கனவுக்கன்னி கேத்ரினா ஃகைப் உடன் சேர்ந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் இயக்கிய இப்படம் தமிழிலும் வெளியாகிறது.

இந்த வருட முடிவில் அதாவது கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு ரிலீஸ் ஆவதாகச் சொல்லப்பட்ட மெரி கிறிஸ்துமஸ் தற்போது தள்ளிப் போயுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் இன்னும் முழுமையாகாத நிலையில் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 12-ல் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இதுகுறித்த போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.

பொங்கல் வின்னர் யாரு?.. லால் சலாம், அயலான், அரண்மனை 4 படங்களுக்கு ஆப்படித்த கேப்டன் மில்லர்!

பொங்கலுக்கு ஏற்கனவே தனுஷின் கேப்டன்மில்லர், சூப்பர் ஸ்டாரின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகியவை போட்டியில் இருக்க தற்போது மெரி கிறிஸ்துமஸ் படமும் இணைந்துள்ளது. இருப்பினும் இது பாலிவுட் நட்சத்திரங்களைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால் தமிழில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

எனினும் இந்த வருடமே விஜய் சேதுபதி-கேத்ரினா கைஃப் ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் படம் தள்ளிப் போய் உள்ளதால் ஏமாற்றத்தில் உள்ளனர். தற்போது பொங்கல் ரேஸில் மெரி கிறிஸ்துமஸ் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.