பொங்கல் வின்னர் யாரு?.. லால் சலாம், அயலான், அரண்மனை 4 படங்களுக்கு ஆப்படித்த கேப்டன் மில்லர்!

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாருக்கானின் டன்கி மற்றும் பிரபாஸின் சலார் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ள நிலையில், டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த தனுஷின் கேப்டன் மில்லர் தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திடீரென அறிவித்த தேதியில் இருந்து ஒரு மாதம் பின் வாங்கி அடுத்த ஆண்டுக்கு போஸ்ட்போன் செய்யப்பட்ட நிலையில், பொங்கல் ரேஸில் ஏற்கனவே களமிறங்கிய படங்களின் நிலைமை என்ன ஆகும்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் போட்டி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் மற்றும் சுந்தர். சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் ஏற்கனவே பொங்கல் போட்டியில் உள்ள நிலையில், தற்போது கேப்டன் மில்லர் படமும் களமிறங்கினால் பொங்கல் வின்னர் யாரு? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை எப்போதோ முடித்தாலும் கணவருடனான போட்டியை தவிர்க்க இந்த ஆண்டு லால் சலாம் படத்தை வெளியிடாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவித்து இருந்தார்.

மனைவியுடன் மல்லுக்கட்டு

தற்போது மனைவியுடன் வேண்டும் என்றே மல்லுக்க நடிகர் தனுஷ் முடிவு கட்டி இறங்கிவிட்டாரா என்கிற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் கிளம்பி உள்ளன.

மேலும், நடிகர் தனுஷை உதறிவிட்டு சென்ற சிவகார்த்திகேயனுக்கும் செக் வைக்கும் விதமாக 5 ஆண்டுகளாக உருவாகிய பழைய அயலான் படத்துக்கு வேட்டு வைக்கும் விதமாக கேப்டன் மில்லர் படத்தை தனுஷ் இறக்கி ஒட்டுமொத்த சோலியை முடிக்கப் போகிறாரா? அல்லது ஒரே நேரத்தில் 4 முதல் 5 பெரிய படங்கள் ரிலீஸ் ஆனால் வசூலில் அனைத்து படங்களுக்கும் பெரிய பாதிப்பு இருக்கும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் இதனால் பெரும் பாதிப்பு உண்டாகும் என்றும் வேறு சில படங்களும் இன்னும் கோதாவில் குதித்தால் தனுஷ் படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் லால் சலாம், அயலான் படங்களுக்கும் ஆபத்து உள்ளது என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews