வாலிபக்கவிஞர் வாலிகிட்டே சவாலா? யுவனின் வேகமான டியூனுக்கு கொடுத்த பாடலைப் பாருங்க…

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 2004ல் வெளியான சென்னை 600028ல் இருந்து கோட் படம் வரை அவர் தான். மங்காத்தா அந்த வகையில் 2011ல் தல…

New Project 2024 12 13T225542.041 2

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜாதான். 2004ல் வெளியான சென்னை 600028ல் இருந்து கோட் படம் வரை அவர் தான்.

மங்காத்தா

அந்த வகையில் 2011ல் தல அஜீத் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய படம் மங்காத்தா. யுவன் தான் இசை. இது மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்தப் படத்தில் வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், என் நண்பனே என்னை ஏய்த்தாய் ஆகிய பாடல்களை எழுதியவர் யார் தெரியுமா? வேறு யாருமல்ல. வாலிபக்கவிஞர் வாலி தான்.

அதிலும் என் நண்பனே என்னை ஏய்த்தாய் என்ற பாடலுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அந்தப் பாடல் உருவான விதம் குறித்து யுவன் இப்படி சொல்கிறார்.

mankathaஇந்தப் பாடலைப் பொருத்தவரை இதன் மெட்டு மிகவும் கஷ்டமான முறையில் அமைக்கப்பட்டது. வேகமாக டியூன் நகர்ந்து சென்றது. இதற்கு பாடல் வரிகளை எழுத வேண்டும். வாலி எப்படி எழுதப் போகிறார்னு யுவன் நினைத்தார்.

ஆனாலும் டியூனை அவருக்காக மாற்றவில்லை. தயாராக இருந்தது. இதைக் கேட்டதும் வாலி எனக்கு இதெல்லாம் ஜூஜூபி என்று சொல்லியபடி வரிகளைப் போட்டார். ‘முதல் வரி முதல் முழுவதும் பிழை. விழிகளின் வழி விழுந்தது மழை. எல்லாம் உன்னால் தான்…’

அசால்டாக எழுதினார்

vaali
vaali

‘இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்… கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்’ என்று அவர் வேகமாகப் போட்ட டியூனுக்கும் வரிகளை அசால்டாக எழுதினார். இதைப் பார்த்ததும் வெங்கட்பிரபு, யுவன் சங்கர்ராஜா இருவருமே வாயடைத்துப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.

விளையாடு மங்காத்தா

2011ல் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படம் மங்காத்தா. அஜீத் உடன் அர்ஜூன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ளனர். விளையாடு மங்காத்தா, நீ நான், வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், நண்பனே, பல்லே லக்கா, தீம் இசை, விளையாடு மங்காத்தா ஆகிய பாடல்களைக் குறிப்பிடலாம்.

வாலிபக்கவிஞர்

வாலியைப் பொருத்தவரை எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்தே தற்போதைய இளம் நடிகர்கள் வரை பாடல் எழுதி விட்டார். இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு பாடலை விட இசை தான் முக்கியம். அதனால் பாடல் ஒரே இரைச்சலாக இருக்கும். பிக்கப் ஆகாது. ஆனால் தமிழ்சினிமாவைப் பொருத்த வரை இசையை விட பாடல் வரிகள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதனால் இன்றைய 2 கே கிட்ஸ்களுக்கும் பிடித்த வகையில் பாடலை எழுதி அசத்தியுள்ளார் வாலிபக்கவிஞர் வாலி.