மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..

By John A

Published:

கவியரசர் கண்ணதாசன் தமிழ் திரைப்படங்களிலும், இலக்கியங்களிலும் படைத்த சாதனைகள் மகத்தானது. வாழ்க்கையின் தத்துவங்களை எளிதில் புரியும் வண்ணம் சில வரிகளில் எழுதி அதை பாமரரும் உணர்த்தும் வகையில் படைப்பது கண்ணதாசன் ஸ்டைல். காதல், சோகம், தத்துவம் என இவர் எழுத்தில் உருவான பாடல்கள் நெஞ்சைப் பிழிபவை, காதல் ரசம் சொட்டுபவை, வாழ்க்கையை உணர வைப்பவை. இப்படி காலமெல்லாம் போற்றப்படும் கண்ணதாசன் ஒரே மகாபுனித நூலையே சிலவரிகளில் எழுதியிருக்கிறார்.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை ஒரே பாடலில் எழுதி முடித்திருக்கிறார் கண்ணதாசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் ஆகியோரது நடிப்பில் 1962ல் பி.ஆர். பந்தலு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கர்ணன். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் மகாபாரதத்தில் கர்ணன் வாழ்க்கையை உணர்த்துவதாக எடுக்கப்பட்டது. மாபெரும் ஹிட்டான இந்தப் படத்தில் தான் ஒட்டுமொத்த பகவத் கீதையை ஒரே பாட்டில் எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜியிடமிருந்து வந்த பரிசு.. திறந்து பார்த்து நெகிழ்ந்து போன வசனகார்த்தா ஆரூர்தாஸ்

இயக்குநர் பி.ஆர். பந்தலு ஒட்டுமொத்த படத்தையும் எழுதி முடித்த பின் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்வதுபோன்று ஒரு காட்சி வைக்கலாம் என எண்ணினாராம். ஆனால் அப்படி வைத்தால் படத்தின் நீளம் இன்னும் அதிகமாகும். ஆனால் காட்சி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற யோசனையில் ஆழ்ந்தவருக்கு இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அதான் கண்ணதாசன் இருக்கிறாரே என்று கூறி ஒட்டுமொத்த பகவத் கீதையை அவர் ஒரே பாடலில் முடித்து விடுவார் கவலையை விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இப்படி பல நூறு பக்கங்கள் கொண்ட அந்த உபதேசத்தினை கண்ணதாசன் படித்தார். அடுத்த சில நிமிடங்களில் பாடல் தயாரானது. வெறும் மூன்றே நிமிடங்களில் முடியும் வகையில் ஒட்டுமொத்த பகவத் கீதையை கண்ணதாசன்

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா
மரணத்தின் தன்மை சொல்வேன்
மானிடர் ஆன்மா மரணமெய்தாது
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய்
மேனியைக் கொல்வாய்

என்று பாடலாக எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் வருவதற்கு முன் போர்க்களத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்யும்படி அமைந்திருக்கும். இதேபோல் பைபிள் முழுவதையும் இயேசு காவியம் என்று எளிமையாகப் புரியும் வகையில் படைத்திருக்கிறார் கண்ணதாசன்.