இசையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு பின்னணி பாடகராக அறியப்பட்டதைக் காட்டிலும், மேடைக் கச்சேரிகளில் அதிகம் கவனிக்கப்பட்டவர்தான் பாடகி கல்பனா ராகவேந்தர். இன்று முன்னணி டிவி சேனல்களின் ரியாலிட்டி பாடல் நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று அசத்தி வரும் கல்பனா ராகவேந்தரின் முதல் என் ராசாவின் மனசிலே படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடல்தான்.
மழலைக் குரலில் இளையராஜாவின் கிராமத்து இசையில் இவர் பாடிய இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இதன்பின்னர் பல மேடைக் கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார். இருப்பினும் விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தில் இடம்பெற்ற லா..லா.. நந்தலாலா என்ற பாடல் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனிபா.. நபிகள் நாயகம் அருளால் இசைஞானி ஆன வரலாறு
மாயாவி படத்தில் கடவுள் தந்த அழகிய வாழ்வு’, ‘காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே’, பிரியமான தோழியில் ‘பெண்ணே நீயும் பெண்ணா’, போன்ற பாடல்களும் ‘ஒரு சின்ன வெண்ணிலா போலே’, ‘மதுரை ஜில்லா மச்சம்தாண்டா’, ‘ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு’, ‘டார்லிங் டம்பக்கு’, ‘ஓயா ஓயா’ என இவர் ஹிட் லிஸ்ட்-ல் நிறைய பாடல்களைச் சொல்லலாம். தமிழ், தெலுங்கு என இதுவரைக்கும் ஆயிரத்து ஐநூறுப் பாடல்களைப் பாடியிருக்கும் கல்பனாவின் தந்தை பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான டி.எஸ்.ராகவேந்திரா தான்.
இவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்துப் புகழ் பெற்றவர். ஒரு கட்டத்தில் சரியான பாடல் வாய்ப்புகள் இல்லாமல், கஷ்டப்படும் போது. மலையாள சிங்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து வென்று ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றது அவருக்கு சினிமாவில் கம்பேக் கொடுத்தது.
பட வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் 2004-ம் வருடம் சில மாதங்கள் சென்னையில் உள்ள காது கேளாதோர் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றியானர். திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த அவருக்கு ஆசிரியர் பணி அனுபவம் கவலைகளை போக்கி, மிகப்பெரிய ஆறுதலைக் கொடுத்தது. தனது குடும்பத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த இசைத் துறையில் இன்னும் ஆழமாக வேரூன்றி தற்போது அயராது உழைத்து வருகிறார் கல்பனா ராகவேந்தர்.