இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனிபா.. நபிகள் நாயகம் அருளால் இசைஞானி ஆன வரலாறு

இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசையமைக்கும் முன் தனது சகோதரர்களின் பாவலர் வரதராஜர் குழுவில் இணைந்து மேடைக் கச்சேரிகள் பலவற்றில் வாசித்து வந்த காலகட்டம் அது. அப்போது பல இசை ஜாம்பவான்களிடம் சென்று வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவை இளையராஜா வாய்ப்பிற்காக சந்திக்க நேரிட்டது.

அப்போது எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்த நாகூர் ஹனிபா இளையராஜாவைப் பார்த்ததும், “யாருப்பா நீங்க, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர், ‘நான் ஒரு இசையமைப்பாளர், அதற்காக வாய்ப்புகளைத் தேடி பல முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன்படி நீங்கள் பாடும் ஒரு பாடல்களுக்கு நான் இசையமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்க’, நாகூர் ஹனிபா, நீங்கள் யார் என்று திரும்பவும் கேட்டார்.

அதற்கு, ‘மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய இசைக் கச்சேரி செய்து மிகவும் பிரபலமான பாவலர் வரதராஜனுடைய சகோதரர்தான் நான், என்னுடைய பெயர் ராசய்யா. நாங்கள் 4 பேர் சகோதரர்கள். அனைவரும் ஒன்றாக இணைந்துதான் மேடை நாடகம், இசைக் கச்சேரி, கம்யூனிஸ்ட் கட்சி விழாக்கள் ஆகியவற்றில் வாசித்து வருகிறோம். அந்த வகையில் தான் உங்களிடம் வாய்ப்பு தேடி வந்துள்ளேன்’ என்றார்.

அதற்கு நாகூர் ஹனிபா, “என்னுடைய பாடல்களை எச்.எம்.வி நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அதனால் நீங்கள் போய் அவர்களை பார்த்து பேசிக்கோங்கன்னு சொல்ல, உடனே இளையராஜா நான் அவர்களை சந்தித்து பேசினேன், அதன் பிறகு தான் அவர்கள் உங்களை பார்க்க சொன்னார்கள் என்றார். அப்படியா நல்லது. சரி நீங்க இப்போ போயிட்டு நாளைக்கு காலைல வாங்க, பாடல் எழுதி வைக்கிறேன்” என்று இளையராஜாவை அனுப்பி வைத்துவிட்டார்.

தன்னை கடுமையாக விமர்சித்து எழுதிய பத்திரிகையாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஷாக் : இறப்பின் போது நடந்த புல்லரிக்க வைக்கும் சம்பவம்

மறுநாள் இளையராஜா சொன்னபடியே வர நாகூர் ஹனிபா பாடல் வரிகளையும் எழுதி வைத்திருந்தார். உடனே வீட்டில் இருந்த ஹார்மோனிய பெட்டியை எடுத்து இளையராஜாவிடம் கொடுத்து வாசிங்க என்றார். உடனே டியூனை இளையராஜா வாசிக்க ’தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு…எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு.’ என்று ஹனிபா பாடி முடித்தார்.

அதன் பிறகு நாகூர் ஹனிபா இளையராஜாவைப் பார்த்து, ‘நீங்க வாசிக்கும் போது தென்றல் காற்றே உள்ள வந்தது மாதிரி உணர்ந்தேன்னு என்று சொல்லி,  அபாரமான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. எங்கேயோ போகப்போகிறீர்கள் என அவர் தலையில் கையை வைத்து திரைத்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு, நீங்க நல்லா வருவீங்க தம்பி’ என மனதாரப் பாராட்டி ஆசீர்வதித்தார்.

நபிகள் நாயகத்தின் புகழ் சேர்க்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்தபின் இளையராஜாவுக்கு வந்த பட வாய்ப்புதான் அன்னக்கிளி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.