தமிழ்நாட்டு பொண்ணான மஞ்சு வாரியார், ஜொலித்தது என்னவோ மலையாள சினிமாவில்தான். இவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பது இன்னும் பல பேருக்கு தெரியவும்கூட செய்யாது என்பதே உண்மை.
1995 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அவர், தற்போது 25 ஆண்டுகளைத் தாண்டி சினிமாவில் நிலைத்து நடித்து வருகின்றார்.
சினிமாவில் பெரிய அளவில் ஜொலித்த காலகட்டத்திலேயே இவர் மலையாள நடிகர் திலீப்பை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார், இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பின்னர் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றனர்.
அதன்பின்னர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார், தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதினையும் கொள்ளை கொண்டுவிட்டார்.
கொரோனா ஊரடங்கால் ஓய்வில் இருந்துவரும் மஞ்சு வாரியார், வீணை வாசிக்கக் கற்றுள்ள வீடியோவினை சமீபத்தில் வெளியிட்டு வைரலாக்கினார். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு வேலையினைச் செய்துள்ளார்.
அதாவது, மிகவும் சூப்பராக போட்டோஷுட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். குடும்பப் பாங்கான கெட்டப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.