குண்டாகி, கருத்துப் போன நம்ம மணிமேகலையோட போட்டோவைப் பாருங்க!!

By Staff

Published:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையினைத் துவக்கிய மணிமேகலை கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் இன்னும் கூடுதலான ரசிகர்களையே பெற்றார்.

குக்கு வித் கோமாளியில் இவர் செய்யும் குறும்புகளுக்கு குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் அடிமைகள் என்றே சொல்லலாம். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காதரின் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற அவர் அங்குள்ள கிராமத்தில் மாட்டிக் கொண்டார்.

d2b2cf0ae6fc5b430d98e031cb6a8846

இதனால் அந்த கிராமத்திலேயே இவர்கள் பொழுது போக்கி வந்தனர். அவ்வப்போது வீடியோக்கள் பதிவிடுவது, புகைப்படங்கள் பதிவிடுவது என அந்த கிராமத்து மக்களுடன் பொழுதுபோக்கி வந்தார். தற்போது 2 மாதங்களைக் கடந்தநிலையில், இவர்கள் இருவரும் 3 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய மணிமேகலை காதருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “இனிமே எனக்கு நீ, உனக்கு நான். நமக்கு சமையல்கார அக்கா அவ்ளோதான்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பது நம்ம மணிமேகலையா? என்று ரசிகர்களுக்கு டவுட்டே வந்துடுச்சுங்க, அந்த அளவு கருப்பா ஆகிட்டாங்க, அதேமாதிரி எப்பவும் ஒல்லியா இருக்க மணிமேகலை ரெண்டு சுத்து கூடிட்டாங்க. கிராமத்து வெயிலும், கிராமத்து சாப்பாடும் தான் காரணம்போல என்று ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

Leave a Comment