அறிஞர் அண்ணா மேடை நாடகங்களை நடத்திக் கொண்டும் நடித்துக் கொண்டும் இருந்த காலத்தில் தான் “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை நடத்த முடிவு செய்தார். இந்த நாடகத்திற்கு அவரே கதை, வசனம் எழுதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் செய்தார். இதில் சத்ரபதி சிவாஜி கேரக்டரில் எம்ஜிஆரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று அண்ணா முடிவு செய்தார்.
மணிவண்ணன் – பாக்யராஜ் இடையே கத்திச்சண்டை.. புதுமையான விளம்பரத்தால் சூப்பர்ஹிட் ஆன படம்..!
சத்ரபதி சிவாஜி கேரக்டருக்கு கத்தி சண்டை போன்ற காட்சிகள் வருவதால் எம்ஜிஆர் கத்தி சண்டையில் வல்லவர் என்பதால் எம்ஜிஆர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஜி.ஆருக்கு தேவையான காஸ்டியூம்களும் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் தான் திடீரென எம்ஜிஆர் இந்த நாடகத்தில் நடிக்க முடியாது என்று விலகினார்.
நாடகம் அரங்கேற்றம் செய்யும் நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென எம்ஜிஆர் முடியாது என்று சொன்னதால் ஒரு சில நடிகர்களை மாற்று ஏற்பாடு செய்ய அண்ணா முயற்சி செய்தார். ஆனால் எதுவும் செட் ஆகாத நிலையில் தான் பெண் வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த கணேசனை சிவாஜி கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்று சிலர் கூறினர்.
அண்ணாவும் தயங்கி தயங்கி ஒப்புக்கொண்டு அவரிடம் இந்த நாடகத்தின் வசனங்களை கொடுத்து நாளைக்குள் இந்த வசனங்களை மனப்பாடம் செய்து என் முன் நடித்துக் காட்டினால் நீ தான் சிவாஜி கேரக்டரில் நடிக்கிறாய் என்று கூறினார். கணேசன் அட்டகாசமாக அந்த காட்சிகளை மறுநாள் நடித்து காண்பிக்க, ‘நீதான் இந்த படத்தின் நாயகன் என்பதை அண்ணா உறுதி செய்தார்.
ஃபாசில் இயக்கிய கலகலப்பான காமெடி படம்.. டெலிபோன் டைரக்ட்ரியால் ஏற்பட்ட குழப்பம்..!
அரங்கேறிய நாடகத்தை நேரடியாக பார்க்க வந்த தந்தை பெரியார் சிவாஜியாக நடித்த அந்த பையன் யார்? அவனை கூப்பிடுங்கள் என்று கூறினார். அப்போது கணேசன் பவ்யமாக வந்த போது உன்னுடைய நடிப்பிற்கு நான் அடிமை நீ இனிமேல் வெறும் கணேசன் அல்ல, சிவாஜி கணேசன் என்று பட்டம் கொடுத்தார்.
அதன் பிறகு தான் விசி கணேசன் என்று இருந்த அவர் சிவாஜி கணேசன் ஆக மாறினார். பின்னாளில் சிவாஜி கணேசன் தனது சுயசரிதையை எழுதும்போது “சிவாஜி என்பது எனக்கு பெரியார் கொடுத்த பிச்சை” என்று நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டிருந்தார்.