தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் அதனை கடந்த 75 நாட்களாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்கள் வரையில் முத்து மற்றும் பவித்ரா கேப்டன்சி சர்ச்சை பற்றி விஜய் சேதுபதி என்ன பேச போகிறார் என்பதை அறிவதற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டாலே அதில் ஒவ்வொரு வாரமும் சர்ச்சைக்கு குறைவே இருக்காது.
அந்த வகையில் இந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாகி இருந்த விஷயம் தான் முத்து மற்றும் பவித்ரா ஆகியோரின் கேப்டன்சி டாஸ்க் தொடர்பான பிரச்சனை. ஒரு பக்கம் முத்துக்குமரன் வேண்டும் என்று தான் அந்த டாஸ்க் பவித்ரா கேப்டனாக கூடாது என்ற நோக்கில் செய்தார் என்றும் இன்னொரு பக்கம் அவர் கவனிக்காமல் தான் தோல்வி அடைந்தார் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
முத்து போட்ட திட்டம்?..
இன்னொரு பக்கம் வேண்டுமென்றே விளையாடினால் பிக் பாஸ் எச்சரிப்பார் என தெரிந்தே தான் முத்து இப்படி செய்திருக்கலாம் என்ற ஊகமும் உள்ளது. அனைத்து போட்டியாளர்களையும் நிறுத்தி பேசிய பிக் பாஸ், இது மிகவும் தவறான விஷயம் என்றும் வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பதால் கேப்டன்சி டாஸ்க்கை ரத்து செய்கிறேன் என்றும் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் முத்துக்குமரன் கண்ணீர் வடித்து தான் வேண்டுமென்றே செய்யவில்லை என ஆயிரம் முறை விளக்கம் கொடுத்தும் பிக் பாஸ் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்றே தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் தான் நேரடியாக பிக் பாஸிடம் கேமரா முன் சென்று பேசிய பவித்ரா, “முத்து இப்படி பிக் பாஸ் வீட்டில் வீட்டிற்குள் இருப்பது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. நமது வீட்டில் ஒருவர் இப்படி சகஜமாக பேசாமலோ, பழகாமலோ இருந்தால் கஷ்டமாக இருக்கும்.
மன்னிப்பு கேட்ட பவித்ரா..
இதனால் நீங்கள் தயவு செய்து முத்துவை அழைத்து பேசுங்கள் பிக் பாஸ். நான் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன். நான் சொல்வதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என தெரியவில்லை. ஆனால் இத்தனை பேர் இருக்கும் வீட்டில் ஒருவர் மட்டும் வேதனையாக இருப்பதை பார்ப்பதற்கே சங்கடமாக உள்ளது. யாருமே பிக் பாஸ் வீட்டிற்குள் வேண்டுமென்றே ஒரு டாஸ்க்கில் தோல்வியடைய வேண்டுமென விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
நான் அவரிடம் பேசிய போதும் முத்து அதைத்தான் என்னிடம் கூறினார். முத்துக்குமரன் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. ஒருவர் மட்டும் இங்கே இப்படி இருப்பதை பார்க்க என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் அவரை அழைத்து ஒரு முறையாவது பேசுங்கள்” என உருக்கமாக பவித்ரா கோரிக்கை வைத்தார்.